அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவி!!

244

ஈரானில் பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளை எதிர்த்து, திடீரென அரைகுறை ஆடைகளுடன் கல்லூரி மாணவி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைத்தளங்களில் இது குறித்து வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் மாணவியை கைது செய்தனர்.

2022ம் ஆண்டில், ஹிஜாப் அணியாததற்காக 22 வயது பெண் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் இருந்த போது மர்மமான முறையில் இறந்தார். இதைத் தொடர்ந்து ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அந்நாட்டில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஈரானின் கடுமையான இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தான் ஆடையைக் கழற்றியதாகக் கூறிய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார்.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், மனநலம் பாதிக்கப்பட்டதால் ஆடைகளை களைந்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.