‘அவன் சரியில்லைன்னு சொன்னேன்’ கதறிய அண்ணன் கர்ப்பிணி காதலி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!!

149

‘அவன் சரியில்லைன்னு பலமுறை என் தங்கையிடம் அறிவுறுத்தி, அவனுடனான தொடர்பைத் துண்டிக்க சொல்லி வந்தேன். பாவி இப்படி பண்ணிட்டானே’ புதைக்கப்பட்ட தனது தங்கை சோனியின் சடலத்தைத் தோண்டி எடுத்ததும் அடையாளம் காட்டிய அண்ணன் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

19 வயசு காதலி சோனி சலீம் காதலித்து வந்த நிலையில், இருவரும் நெருக்கமாக தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததால் கர்ப்பமடைந்திருக்கிறாள். அப்போதிலிருந்தே கர்ப்பத்தைக் கலைக்க சொல்லி சலீம் தொடர்ந்து சோனியை வற்புறுத்தி வந்துள்ளான்.

சோனி கர்ப்பத்தைக் கலைக்க மறுத்து, மாறாக தன்னைத் திருமணம் செய்துக் கொள்ளக் கூறி சலீமை வற்புறுத்தி வந்ததால் 7 மாத கர்ப்பிணியான சோனியை தனியே அழைத்து சென்று கொலைச் செய்து, யாருக்கும் தெரியாமல் 3 அடி ஆழத்தில் குழி தோண்டி புதைத்திருக்கிறார்.

சோனியின் காதலன் சலீம், தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து இந்த கொடூர கொலையைச் செய்ததாக போலீசாரிடம் கூறியிருக்கிறான்.

இது குறித்து போலீசார் கூறுகையில், கர்ப்பமடைந்ததால் சோனி தனது காதலனை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

7 மாதங்களைக் கடந்து விட்ட நிலையில், கர்ப்பத்தைக் கலைப்பது பற்றியும் அவள் ஆரம்பத்தில் இருந்தே சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக காதலர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் நீடித்து வந்துள்ளது.


ஒவ்வொரு முறையும் திருமணம் குறித்து பேசும் போது சலீம் சோனியிடம் கர்ப்பத்தை கலைக்குமாறு பலமுறை கேட்டதாக கூறப்படுகிறது, ஆனால் அந்த கோரிக்கையை சோனி மறுத்து விட்டார்.

தனது தங்கை காணாமல் போனதாக சோனியின் அண்ணன் கொடுத்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையைத் துவங்கினார்கள். சோனி அடிக்கடி யாரிடமாவது செல்போனில் பேசிக் கொண்டிருப்பதை கவனித்ததாக அவளது பெற்றோர் போலீசாரின் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் சோனியின் செல்போனில் வந்த அழைப்புகளை வைத்து சலீமை போலீசார் நெருங்கினார்கள். கடந்த திங்கட்கிழமை சோனி சலீமை சந்திப்பதற்காக தனது வீட்டில் இருந்து அவளுக்கு சொந்தமான சில பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றபோது இந்த மரண சம்பவம் நிகழ்ந்துள்ளது.

போலீசாரின் விசாரணையில், சலீம், மேலும் இருவரின் உதவியுடன், சோனியை ஹரியானாவின் ரோஹ்தக் நகருக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளான். காரில் சோனியை அழைத்து சென்ற போதே அவளுக்கு காதலன் மீதும், அவனது இரு நண்பர்கள் மீதும் சந்தேகம் வந்துள்ளது.

பின்னர் காரை விட்டு ரோஹ்தக் நகரில் இறங்கியதும் அவள் தனது சந்தேகம் குறித்தும் தகராறு செய்திருக்கிறாள். ஆள் அரவமற்ற பகுதி என்பதால் வாக்குவாதத்தில் தைரியமாக சோனியை மூவரும் சேர்ந்துக் கொலை செய்து, சோனியின் உடலை 3 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி புதைத்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான் சலீம்.

சோனி, இன்ஸ்டாகிராமில் 6,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களுடன் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருந்து வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர் சலீமுடன் புகைப்படங்களையும், வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டார்.

சமூக ஊடக தளங்களில் சோனியின் பல படங்களையும் சலீம் வெளியிட்டதாக காவல்துறையினர் கூறினர். இந்த கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து டெல்லி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.