அவுஸ்திரேலியாவில் இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் தமிழ் சிறுமியொருவருக்கு ஏற்பட்ட அ வலம் !!!!

379

அவுஸ்திரேலியாவில்…

அவுஸ்திரேலியாவின் – பெர்த் சிறுவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட இந்தியப்பின்னணி கொண்ட தமிழ் சிறுமியொருவர் வைத்தியசாலையின் அலட்சியப்போக்கு மற்றும் கவனக்குறைவினால் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பெர்த்தின் Morley பகுதியைச் சேர்ந்த ஏழு வயதான ஐஸ்வர்யா கடந்த வெள்ளிக்கிழமை காய்ச்சல் காரணமாக பெர்த் சிறுவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது அங்கு சுமார் 2 மணி நேரமாக ஐஸ்வர்யா காத்திருந்ததாகவும், தனது மகளுக்கு உடனடியாக சிகிச்சை ஆரம்பிக்குமாறு அங்கிருந்தவர்களிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் அவர்கள் கவனம் செலுத்தவில்லை எனவும் தாயாரான பிரஷிதா சசிதரன் அந்நாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.


இதனை தொடர்ந்து மருத்துவர்கள் ஐஸ்வர்யாவை பார்வையிட்ட போது அவரது நிலைமை மிக மோசமடைந்திருந்ததாகவும், சிகிச்சை ஆரம்பித்து சில மணி நேரங்களுக்குள் ஐஸ்வர்யா உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தனது குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் உயிரிழந்திருக்க மாட்டார் எனவும், வைத்தியசாலையின் அலட்சியப்போக்கு மற்றும் கவனக்குறைவினால் தமது மகளை இழந்துவிட்டதாகவும் தந்தையான முரளிதரன் அஸ்வத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐஸ்வர்யாவுக்கு சிகிச்சை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு மேற்கு அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சர் Roger Cook உத்தரவிட்டுள்ளார்.