ஆசிரியர் குடும்பம் கொலை விவகாரம்.. மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறே மூலதனம்!!

156

உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள பவானி நகரில் வசித்து வந்தவர் சுனில் குமார். பள்ளி ஆசிரியரான இவருக்கு பூனம் பார்தி என்ற மனைவியும், 2 மற்றும் 6 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 3ம் தேதி மர்ம நபர்களால் இவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இந்த கொடூர சம்பவத்தில் சந்தன் வர்மா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு சுனில் குமாரின் குடும்பத்தாரை சந்தன் வர்மா கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதற்காக சுனில் குமாரின் வீட்டில் சோதனை நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சுனில் குமாரின் குடும்பத்தினரை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொள்ள சந்தன் வர்மா திட்டமிட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் கூறுகையில், “சந்தன் வர்மா தன்னை மிரட்டுவதாக சுனில் குமாரின் மனைவி பூனம் பார்தி இரண்டு மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், எங்கள் குடும்பத்திற்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சந்தன் வர்மாதான் பொறுப்பு. இந்நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதற்கு காரணம் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி ரேபரேலியில் உள்ள மருத்துவமனைக்கு தனது கணவருடன் பூனம் பார்தி சென்றுள்ளார்.அப்போது பூனம் பார்தியிடம் சந்தன் வர்மா தவறாக நடந்து கொண்டார்.


சந்தன் பூனத்தையும் அவரது கணவரையும் அறைந்ததாகவும், இதைத் தட்டிக்கேட்டதாகவும், இதைப் பற்றி போலீஸில் சொன்னால் உன் குடும்பத்தைக் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியதாகவும் பூனம் கூறியதைத் தொடர்ந்து போலீஸில் முதல் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவரை காவலில் எடுத்து விசாரித்து வரும் போலீசார், சந்தன் வர்மாவின் மொபைல் போனை ஆய்வு செய்துள்ளனர். அதில் பூனம்பாரதி மிரட்டியதாக தகவல் இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து எதிர்க்கட்சிகளும் யோகி ஆதித்யநாத் அரசை விமர்சித்துள்ளன. எனினும், இது தொடர்பாக விரைந்து விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் யோகி அரசை விமர்சித்திருந்தார்.