ஆசையாய் ஆஸ்திரேலியாவில் TREKKING சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

286

Trekking சென்ற இளம்பெண் ஒருவர் பள்ளத்தில் விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் வேமுரு உஜ்வாலா (23). மருத்துவரான இவர், தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.

இந்த சூழலில் கடந்த மார்ச் 2-ம் தேதி இவர், ஆஸ்திரேலியாவில் உள்ள லாமிங்டன் தேசிய பூங்காவில் உள்ள யான்பாகூச்சி நீர்வீழ்ச்சிக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது அனைவரும் ஆங்காங்கே இருந்து போட்டோ எடுத்துக்கொள்ளவே, இவரும் தான் கொண்டுபோன Tripod-ஐ பயன்படுத்தி போட்டோ எடுத்துள்ளார்.

அந்த சமயத்தில் அந்த Tripod-ஐ சுமார் 20 மீட்டர் ஆழமுள்ள விழுந்துள்ளது. இதனை கண்ட அந்த இளம்பெண், தாமாகவே எந்த உதவியும் இன்றி எடுக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் அவர் கால் இடறவே, சட்டென்று சரிந்து பள்ளத்தில் விழுந்துள்ளார்.

முதல் 10 மீட்டரில் சிக்கிய அவர், சில நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் நிரம்பிய மீதமுள்ள 10 மீட்டரில் சரிந்து மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து இவரது நண்பர்கள் தேடி அழையவே, வேமுரு உஜ்வாலா பள்ளத்தில் விழுந்தது தெரியவந்தது.


இதைத்தொடர்ந்து சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உஜ்வாலாவின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்த உஜ்வாலா, மருத்துவ படிப்பு முடித்து தற்போது அங்கிருக்கும் பெண்கள் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்து வருகிறார். இவரது குடும்பமும் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.