ஆன்லைன் விளையாட்டால் விபரீதம்… மனைவி, ஒரு வயது குழந்தையுடன் விபரீத முயற்சி!!

150

புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவாட்டம் தென்னல் கிராமத்தில் வசித்து வருபவர் 30 வயது விஜயகாந்த் . இவருடைய மனைவி வாணி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் புதுச்சேரியில் வில்லியனூர் பகுதியில் வாடகைக்கு வசித்து வருகிறார்.ஆன்லைன் முதலீட்டில் விஜயகாந்த் பணத்தை இழந்தார்.

அதன் பிறகு தனது நண்பர்கள் பலரிடம் கடன் பெற்று, அதனையும் ஆன்லைன் மூலம் இழந்துள்ளார். இதனால் கடன் தொல்லைக்கு ஆளான அவர், மனைவி மற்றும் குழந்தையுடன் ஊசுட்டேரி பூங்காவிற்குச் சென்றுள்ளார்.

அங்கு, விஷம் சாப்பிட்டு குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதன்பிறகு அங்கிருந்து மோட்டார் பைக்கில் புதுச்சேரி நோக்கி சென்றார். வழியில் மேட்டுப்பாளையம் பூங்கா அருகே வந்தபோது 3 பேரும் மயங்கி கீழே விழுந்தனர்.

இதனைக் கண்டவர்கள் மூவரையும் மீட்டு அருகில் உள்ள கதிர்காமம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மயங்கி விழுந்து சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், சட்டைப்பையில் கடிதம் ஒன்றை வைத்துக் கொண்டார். அதில், “எனது மரணத்திற்கு எம்.எம். குப்பத்தில் வசித்து வரும் பெண் ஒருவர்தான் காரணம்.


கடனுக்காக எனது நண்பரிடம் இருந்து நான் வாங்கிக் கொடுத்த பத்திர ஆவணத்தை பெற்றுக் கொண்டு, பணம் எதுவும் தராமல் ஏமாற்றியதுடன் பத்திரத்தை திரும்பத் தராமல் ரூ. 5 லட்சம் கேட்டு தொல்லை தருகிறார் அப்பெண்” என எழுதியிருந்தார். இச்சம்பவம் குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.