ஆப்கானில் இருந்து வெளியேறிய கடைசி வீரர் அமெரிக்க வெளியிட்ட புகைப்படம் : தலிபான்கள் கொண்டாட்டம்!!

350

அமெரிக்க வீரர்..

அமெரிக்காவில் இரட்டை கோபுர தா.க்.குதலை அடுத்து, அந்த தா.க்.குதலில் ஈடுபட்ட பின் லேடனை அ.ழி.ப்.ப.தற்காக அமெரிக்க ரா.ணு.வம் ஆப்கானிஸ்தானிற்குள் நுழைந்தது.

கடந்த 20 வருடமாக அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், தலிபான்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. ஆகஸ்ட் 31 (இன்று) ஆம் தேதிக்குள் வெளியேறுவதாக அமெரிக்க ராணுவம் அறிவித்திருந்ததை அடுத்து, அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.

இதையடுத்து அங்குள்ள வெளிநாட்டினர் கடந்த சில நாட்களாக தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி வந்தனர். ஆப்கானிஸ்தானியர்களும் தலிபான்களுக்கு ப.ய.ந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். இன்னும் பலர், காபூல் விமான நிலையத்தில் காத்திருப்பதாகக் கூறப் படுகிறது.


இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் இருந்து கடைசி அமெரிக்க ரா.ணுவ வீரரும் வெளியேறி விட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளத் தில் பதிவிட்டுள்ள அமெரிக்க பா.து.காப்புத்துறை,

காபூலில் அமெரிக்காவின் பணி முடிவுக்கு வந்துவிட்டதாகவும், ஆப்கனிலிருந்து கடைசி வீரராக, மேஜர் ஜெனரல் கிரிஸ் டோனாஹூ, சி-17 விமானம் மூலம் வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க வீரர் வெளியேறும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து தலிபான்கள் இதை கொண்டாடியுள்ளனர். அவர்கள் வானத்தை நோக்கி து.ப்.பா.க்.கி.யால் சு.ட்.டு கொ.ண்.டா.ட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.