பிரேசிலில்..
ஆறு மனைவிகளைக் கொண்ட ஒருவர், ஒவ்வொருவருக்கும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் அவர் தனது முதல் குழந்தையை யாருடன் கருத்தரிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க போராடியதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
பிரேசிலின் சாவோ பாலோவைச் சேர்ந்த 37 வயதான Arthur O Urso-வுக்கு மொத்தம் ஒன்பது மனைவிகள் இருந்தனர். ஆனால் அவர் மூன்று பேரை விவாகரத்து செய்தார்.
அவர் இப்போது லுவானா கசாகி (27), எமெல்லி சோசா (2)1, வால்குரியா சாண்டோஸ் (24), ஒலிண்டா மரியா (5)1, டாமியானா (23) மற்றும் அமண்டா அல்புகெர்கி (28) ஆகிய ஆறு மனைவிகளுடன் வாழ்ந்துவருகிறார்.
ஆர் பேரில் யாருக்கும் மனக்குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர் தனது எல்லா மனைவிகளுடனும் ஒரு குழந்தையைப் பெற விரும்புவதாக கூறுகிறார்.
“எனது ஆறு மனைவிகளில் யாரையும் வருத்தப்படுத்த நான் விரும்பவில்லை, யார் முதலில் கர்ப்பம் தரிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நாங்கள் வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுத்துள்ளோம்,” என்று ஆர்தர் கூறினார்.
ஆர்தருக்கு முந்தைய உறவிலிருந்து ஏற்கெனவே 10 வயதில் ஒரு மகள் உள்ளார், இப்போது ஒரு மகனைப் பெற விரும்புகிறார். அவர் தனது முதல் மனைவி லுவானாவை தாயாக்க முடிவுசெய்துள்ளார்.
அவரது கருமுட்டையைக் கொண்டு வாடகைத்தாய் மூலம் ஆண்பிள்ளையை பெற்றுக்கொள்ளவிருக்கிறார். வாடகைத் தாய்க்காக ஆர்தர் 40,798 டொலர் வரை செலவழிக்க தயாராக இருப்பதாக கூறினார்.
எதிர்காலத்தில் குழந்தையை தத்தெடுப்பது குறித்தும் சிந்தித்துவருவதாக அவர் கூறினார். 37 வயதான இவர், 10 மனைவிகளைப் பெற்று ஒவ்வொருவருக்கும் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதே தனது “கனவு” என்று முன்னர் கூறியிருந்தார்.