ஆளே இல்லாமல் சாலையில் தனியாக ஓடிய பைக்: அதிர வைத்த காணொளி!!

413

பைக்…

பைக் ஒன்று ஆளே இல்லாமல் தனியாக சென்ற சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட சம்பவமானது புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9 ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடந்துள்ளது.

அங்குள்ள சாலையில் பைக் ஒன்று ஆளே இல்லாமல் தனியாக வந்துள்ளது. இதனை பார்த்த சிலர் அந்த பைக்கை நிறுத்த முயன்றும் முடியவில்லை.


தொடர்ந்து சாலையில் ஓடிக்கொண்டிருந்த அந்த பைக் அங்கிருந்த வளைவு ஒன்றில் திரும்பி கீழே விழுந்தது.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.