இதுவரை 55 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்! கேரளாவில் நடந்த துயர சம்பவம்!!

392

இந்தியாவில் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 55 தமிழர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியிலுள்ள ராஜமாலா நேமக்கடவூர் அடுத்த பெட்டிமாடா பகுதியில் கடந்த 2 தினங்களாகப் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த விபத்தில் இதுவரை 55 தமிழகர்கள் உயிரிழந்து இருப்பதாக தமிழகத்தின் கோவில்பட்டி மாவட்டம் கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன் கூறியுள்ளார்.

கோவில்பட்டி மாவட்டம் கயத்தாறு வட்டத்திலுள்ள பாரதிநகர் பகுதியில் இருந்து 80 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கேரள மாநிலத்தின் பெட்டிமாடாவில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் தேயிலை பறிப்பதற்காக அங்கேயே தங்கி வேலைப் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.


கடந்த 2 நாட்களாக கேரளாவின் இடுக்கி, பத்தனம் திட்டா, வயநாடு போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதையடுத்து பெட்டிமாடா பகுதியிலுள்ள எஸ்டேட்டில் தற்காலிகக் குடியிருப்பு அமைத்து தங்கியிருந்த 80 தமிழர்கள் நிலச்சரிவில் சிக்கியதாக நேற்று செய்தி வெளியானது. இதனால் நேற்றுகாலை முதலே அப்பகுதியில் பேரிடர் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கனமழை காரணமாகவும் கடுமையான நிலச்சரிவின் காரணமாகவும் தேடுதல் பணி தொய்வு அடைந்திருப்பதாகக் கூறப்பட்டது.

நேற்று மாலை வரை 7 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது 55 தமிழர்கள் இதுவரை உயிரிழந்து இருப்பதாக கயத்தாறு வட்டாட்சியர் அதிகாரப் பூர்வமாக தகவல் அளித்து இருக்கிறார் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கயத்தாறு வட்டாட்சியரை அணுகி கேட்டபோது இத்தகவலை அவர் வெளியிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.