இப்படியும் இளைஞர்கள் இருக்கத் தான் செய்கின்றார்களா!!

1004

அக்கரைப்பற்று இளைஞனின் மனப்பான்மை இன்னும் எத்தனை பேரிடம் உருவாக போகின்றது.

எம து நாட்டில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பாவனை , குழுச் சண்டை, சினிமா நடிகர்களான அஜித், விஜய், ரஜனிற்கு கட்டவுட் பாலாபிசேகம் என செலவு செய்வது என ஒரு புறம் அரங்கேறுகின்றது.

மறுபுறம் சில இளைஞர்கள் தாமாக முன்வந்து எந்த பிரதிபலன் எதிர்பாராமல் சமுகசேவைகளில் ஈடுபடுகின்றார்கள்.

சிவில் சமுக த் திலுள்ள ஒவ்வொருவரும் தம்மால் தனது கண்ணில் எதிர்படு ம் சிறுசிறு பிரச்சினைகளை தீர்க்கலாம் .


அன்றாடம் வீதியோரம் எத்தனை யோசிறார்கள் பாடசாலைகளை இடைவிலகி தெருவியாபரம் செய்கின்றார்கள் சிலர் உதவியின்றி பிச்சை எடுக்கின்றார்கள்.

இன்னும் சிலர் மனநோயாளிகளாக வீதிகளின் பொது இடங்களில் அலங்கோலமாக காணப்ப டு வார்கள்,

சில வேளை வீதிகளிலே கவனிப்பாரற்று இ ற ந் து அநாதையாக கிடப்பது பலமுறை கண்டுள்ளோம் .

இ ப் ப டியொரு காலத்தில் அக்கரைப்பற்றை சே ர் ந் த ஜனா ஜனார்தன் எனும் இளைஞனின் தமது மனதில் உதித்த சிந்தனையை செயலில் கா ட் டினார்.

நான் வழமையாக கடமைக்கு செல்லும் கல்முனை பிரதான வீதியில் நூற்றுக்கணக்காரைப் போன்று நானும் இவரை கடந்து செல்வேன்.

காலச்சக்கரத்தில் மாட்டிக்கொண்ட கம்பளிப் பூச்சிகள் போல்.

நான் பணி முடிந்து வரும்போது அதே இடத்தில் அமர்ந்து இருந்தார் நான் அவதானித்தும் கடந்துவிட்டேன்.

மனம் கனக்க மறுபடியும் மோட்டார் பைக்கை சுலற்றி அவரிடம் வந்தேன். உதவி எமக்கு தெரிந்தது பணம் அதை உண்ண முடியாது என்பதை இன்றறிந்தேன்.

நான் நீட்டியதும் கசக்கி என் கண்முன்னே எறிந்தார். பணத்தை கசக்கி எறிந்ததால் நிச்சயமாக அவர் மன
நோயாளியாக தான் இருக்க வேண்டும் என்ப தை உணர்ந்தேன்.

அவருக்கு ஒருவேளை உணவு மட்டும் வழங்கி செல்ல எனது மனம் ஒத்துழைக்கவில்லை. அருகில் செல்ல அறிந்தது அவர் மிகவும் அ ழு க்காகவும் அலங்கோலமாகவும் இருந்தார்.

உடனடியாக தோன்றியது இவரது உருவத்தையும் உடையையும் மாற்ற வேண்டுமென்று அக்கரைப்பற்றுக்கு விரைந்து அனைத்து ஆயத்தங்களுடனும் மறுபடியும் அவரிடம் வந்தேன்.

சிகை அலங்காரத்தில் ஆரம்பிக்கப்பட்டது தாடியும் சீரமைக்கப்பட்டு உடையும் மாற்றியமைக்கப்பட்டது.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் எனது நண்பன் யுலக்சன் எனக்கு உறுதுணையாக இருந்தார்.

சரியாக இரண்டரை மணித்தியாலங்களின் பின் நாங்கள் இருவரும் அவ்விடத்திலிருந்து மிகவும் மகிழ்ச்சியாக வெளியேறினோம்.

ப தி விட்டமைக்கான காரண ம். சாதியின் பேரால் நானும் சில இடங்களில் ஒதுக்கப்பட்டு உள்ளேன்.

ஒரு சில வேளைகளில் தாழ்வு மனப்பான்மையால் தலைகுனிந்து உண்டு. தலைகுனிந்து இருக்கவேண்டியது நானல்ல.

சாதி என தரம்பிரித்த (தகரத்தால்) ஆன தகுதியானவர்கள் அல்லது தரமானவர்கள்.