இரண்டாவதும் பெண் குழந்தை… ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூரம்!!

171

வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூரை அடுத்த பொம்மன்குட்டை பகுதியைச் சேர்ந்த சேட்டு என்கிற ஜீவா (30) டயானா (25) தம்பதி. இவர்களுக்கு இரண்டாவது பிறந்த குழந்தை பெண் என்பதால் கொன்று புதைத்துள்ளார்.

இதுகுறித்து, வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஜீவா-டயானா மற்றும் ஜீவாவின் தாய் பேபி, சேர்பாடி ஊராட்சி செயலர் உமாபதி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி குழந்தை பிறக்கும் முன் கோவிலில் ஆடு, கோழிகளை விலைக்கு வாங்கி பலியிட்டு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என ஜீவா வேண்டிக் கொண்டார்.

ஆனால் பெண் குழந்தை பிறந்தது. இதனால் ஜீவா அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளார். அதனால், தாய் வீட்டில் இருந்த மனைவி டயானாவை, தனக்கு சமைக்க ஆள் இல்லை என்று சூசகமாக கூறி, தன் வீட்டுக்கு அழைத்துள்ளார்.

அப்போது குழந்தையைக் கண்டதும் ஆத்திரமடைந்த அவர், அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது, ​​எட்டு நாட்களே ஆன குழந்தையை வெளியில் தூக்கிச் சென்று வாசலில் இருந்த எருக்கன் செடி பாலை கிடுத்து சிசுவைக் கொன்றுள்ளார்.

மேலும், சந்தேகம் வராமல் இருக்க, டயானா தூங்கிக் கொண்டிருந்த போது அருகில் வைத்ள்ளார். அப்போது ஜீவா வெளியே வந்து குழந்தை ஏன் அழவில்லை என்று கேட்டார்.


பின்னர், டயானாவின் பெற்றோர் சரவணன், கலைச்செல்வி ஆகியோர் வந்து வாயில் ரத்தம் வழிந்த நிலையில் குழந்தையை தூக்கிச் சென்றனர். பின்னர் இது குறித்து மருமகன் ஜீவாவிடம் சரவணன் சத்தம் போட்டபோது, ​​ஜீவா சரவணனை அவதூறாகப் பேசியுள்ளார்.

இதனால், தனது ஆட்களை அழைத்து வருகிறேன் என்று சரவணன் கூறி சென்ற நிலையில், யாருக்கும் தெரியாமல் குழந்தையை மண்ணில் புதைத்துள்ளார் ஜீவா. இந்நிலையில் விசாரணையில் வெளிவந்துள்ள இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.