இரவு நேரத்தில் எதுவும் சாப்பிடாமல் தூங்கச் செல்பவரா நீங்கள்… அப்படி தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா?

1165

சாப்பிடாமல் தூங்கச் செல்பவரா………

நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். அப்போதுதான் நமது உடல் சரியான முறையில் இயங்கும். ஆனால் இரவில் தூங்க செல்லும் முன்னர் மட்டும் அதிகமாக உணவு சாப்பிடக்கூடாது என கூறப்படுவதுண்டு.

இந்த காரணத்திற்காகவே பலரும் மிகவும் குறைவான அளவிலேயே உணவுகளை சாப்பிடுவார்கள் அல்லது உணவே சாப்பிடாமல் கூட தூங்க செல்வதுண்டு.

நாம் இரவு நேரத்தில் உணவு உண்ணவில்லையென்றால் அடுத்தநாள் காலையில் தான் சாப்பிடுவோம். அப்போது உணவு இடைவெளி அதிகமாகி உடலுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இப்படி உணவு எதுவும் உண்ணாமல் உறங்குவதால் உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?


ஊட்டச்சத்து குறைபாடுகள்

இரவு நேரத்தில் உணவு உண்ணாமல் தூங்கச் சென்றால் உடலுக்கு பல ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். அதாவது உடலுக்கு தேவையான சத்துக்களான மெக்னீசியம், விட்டமின் B12 மற்றும் விட்டமின் D3 போன்றவை கிடைக்காமல் போய்விடும்.

தூங்குவதில் சிரமம்

எந்த உணவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் உறங்கச் சென்றால் ஆழ்ந்த உறக்கம் வராது. பசியால் வயிறு கிள்ளும். நாம் தூங்க வேண்டும் என்று நினைத்தாலும் வெறும் வயிறு மூளையை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும்.

அதனால் தூக்கம் பாதிக்கப்படும். அடுத்தநாள் காலையில் எழுந்திருக்கும்போது நம்மால் சுறுசுறுப்பாக எந்த வேலையும் செய்ய முடியாது. அன்றைய நாள் முழுவதும் சோம்பலாகவே இருக்கும்.

வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்படும்

இரவு உணவு சரியாக இல்லை எனில் உடலில் இன்சுலின் சுரப்பதில் பிரச்சனை ஏற்படும். இன்சுலின் நமது உடலுக்குத் தேவையான மிக முக்கிய ஹார்மோன். அதேபோல் கொலஸ்ட்ரால் மற்றும் தைராய்டு இவற்றின் அளவு பாதிக்கப்படும்.

இது போல பலவிதமான பாதிப்புகள் உடலுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே எக்காரணம் கொண்டும் இரவு நேரத்தில் உணவு உண்பதை தவிர்க்க வேண்டாம். சிறிய அளவிலாவது கட்டாயம் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.