இரும்பு கம்பியால் எலுமிச்சை பழம் பறித்த இளம்பெண் பலியான சோகம்!!

27

திருவள்ளுர் அடுத்த வரதாபுரம் பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி பக்தவச்சலம்.இவரது மனைவி 42 வயது லோகேஸ்வரி. இவர் தனது வீட்டின் மாடியிலிருந்து.

இரும்பு கம்பியால் எலுமிச்சை பழம் பறிக்க முயற்சித்துள்ளார். அந்த இரும்பு கம்பி தாழ்வாக செல்லும் மின்சார கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு மகேஸ்வரி துடிதுடித்து பலியானார்.

மின்சாரம் தாக்கி பலியானதை கண்ட குடும்பத்தினர் மின்சாரத்தை நிறுத்திவிட்டு அவர் உடலை மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து தாலுகா போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், அவர் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் குழந்தைகள் எதுவும் இல்லை.

குடியிருப்பு பகுதிகளின் மேல் செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகளை மாற்றி அமைக்க கோரி ஏற்கனவே மின்சார வாரியத்திற்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


மின்சாரத்துறை அலட்சியப்போக்கால் இளம் பெண் பலியானதாக பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டி திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாழ்வாக குடியிருப்பு பகுதியில் செல்லும் மின்கம்பியை மாற்றி அமைக்க மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும் போலீசார் கூறியதால் பின்னர் அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இதனால் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு நிலவியது.