இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா!!

1041

தமது நாட்டுக்கு வரும் சுற்றுலாத்துறையினரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாத நாடுகளின் பட்டியலில் இலங்கையை, பிரித்தானியா இணைத்துக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக பட்டியல்படுத்தியுள்ளது.

நேற்றையதினம் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் என்பன தனது நாட்டு பிரஜைகளுக்கா புதுப்பித்து வெளியிட்டுள்ள உலகளாவிய சுற்றுலா அறிவுறுத்தலிலே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி அவுஸ்திரேலியா, தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகியவை பிரித்தானியர்களுக்கு பயணிக்க பாதுகாப்பான நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


எனினும் கொரோனவைரஸை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள இலங்கையை தமது நாட்டவர்களுக்கு சுகாதார ரீதியாக பாதுகாப்பற்ற நாடாக பிரித்தானியா அறிவித்துள்ளது.