இளம் பெண்ணை கொன்றது ஏன் : கைதான இளைஞன் பரபரப்பு வாக்குமூலம்!!

300

கறம்பக்குடியில் இளம் பெண்ணை கொன்றது ஏன் என்று கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி புளியஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் பைசூர்ரகுமான் (24).

கறம்பக்குடி கடை தெரு பகுதியில் பேன்சி கடை நடத்தி வரும் இவரது மனைவி சகுபர்நிஷா (23). இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தையும், பிறந்து 40 நாட்களே ஆன பெண் குழந்தையும் உள்ளது.

இதனையடுத்து இலுப்பூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சகுபர்நிஷா சென்றார். பின்னர் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்தி வைத்த பிறகு கடந்த 2 தினங்களுக்கு முன் கணவர் வீட்டிற்கு வந்தா.

அன்றிரவு மர்மமான முறையில் சகுபர்நிஷா கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த கறம்பக்குடி போலீசார் கணவர் பைசூர்ரகுமானை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து 2 நாட்களாக விசாரணை செய்து வந்தனர்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே தனிப்படை அமைத்து கொலையாளியை பிடிக்க உத்தரவிட்டார்.


இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்ஐ மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை காவலர்களான அருணகிரி, செந்தில் ஆகியோர் மூலம் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.

சிசிடிவி கேமரா மற்றும் செல்போன் டவர் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புளியஞ்சோலை பகுதியைச் சேர்ந்த முகமது யாகூப் மகன் முகமது அபுஉஸ்மான் (20) என்ற வாலிபர் சகுபர் நிஷாவை கத்தியால் குத்தி கொலை செய்து உறுதியானது.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில்,கடந்த 4, 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாத்தாவின் பணத்தை எடுத்து கொண்டு,

அதன் பிறகும் 2 மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டில் இருந்த மோதிரம் தோடு ஆகியவற்றை திருடி கறம்பக்குடி நகை அடகு கடையில் வைத்து கஞ்சா போதையில் ஹாயாக திரிந்துள்ளார்.

பின்னர் ஒரு மாதத்திற்குள் நகையை மீட்டு தனது வீட்டில் எடுத்த இடத்திலேயே நகையை வைத்து விட்டு நகை கிடைத்து விட்டது என்று நாடகம் ஆடியுள்ளன்.

கஞ்சா போதைக்கு அடிமையான இவர் மேலும், சில தவறான செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளான். இந்நிலையில் சகுபர்நிஷா இலுப்பூரில் இருந்து வந்த தினத்தன்று, இரவு அவரது வீட்டின் எதிரே உள்ள கடைக்கு முகமது அபுஉஸ்மான் வந்துள்ளான்.

வீட்டின் வாசலில் சகுபர்நிஷா தனது குழந்தைக்கு சாதம் ஊட்டி கொண்டிருந்தார். அப்போது முகமது அபுஉஸ்மான், சகுபர்நிஷாவை வெறிக்க பார்த்ததால் அவர் வீட்டிற்குள் சென்று விட்டார்.

அந்த நேரம் பார்த்து முகமது அபுஉஸ்மான், அவனது வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்துள்ளார். பின்னர் சகுபர் நிஷாவின் வீட்டிற்குள் பின் பக்கமமாக சென்றுள்ளான்.

அவரிடம், அக்கா கோழி ஓடி வந்து விட்டது, அதை பிடிக்க வந்துள்ளேன் என்று கூறினான். உடனே சகுபர் நிஷா, பின் வாசலில் உள்ள கதவை திறந்து விட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

அப்போது, நகைக்காக ஆசைப்பட்டு வீட்டிற்குள் அபுஉஸ்மான் நுழைந்தான். இதனால் பயந்துபோன சகுபர் நிஷா ஓடிச்சென்று, 2 வயது மகனை தூக்கி கொண்டு, வீட்டில் மற்றொரு அறையில் உட்கார வைத்தார். பின்னர் “வீட்டிற்குள் ஏன் வந்தாய் வெளியே போ’’ என்று கூறினார்.

அப்போது ஆத்திரமடைந்த முகமது அபு உஸ்மான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சகுபர் நிஷாவை சரமாரியாக குத்தி கழுத்தில் கிடந்த செயினை அறுத்து கொண்டு தப்பி சென்றுவிட்டான். வெளியில் வந்து 2 நாட்களாக எதுமே தெரியாதது போல் இருந்துள்ளான்.

மேலும், காவல் நிலையத்தில் வந்து உறவினர்களோடு நின்று கொண்டு கொலையாளிகளை சீக்கிரம் பிடித்து விடுவார்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று அவன் மற்ற இளைஞர்களிடம் கூறியுள்ளான். ஆனால் தற்போது தனிப்படை போலீசார் விரித்த வலையில் விரைவில் சிக்கியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.