உங்களது கைவிரல் நகத்தில் பிறை போன்ற தோற்றம் இருக்கின்றதா? அப்போ கட்டாயம் இதைப் படிங்க..!!

1321

கைவிரல் நகத்தில்……..

பொதுவாக நமது உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அது எப்படியாவது நமக்கு ஒருசில அறிகுறிகளின் மூலம் வெளிக்காட்டும்.

அந்த வகையில் நமது உடலில் இருக்கும் பிரச்சனைகளை நமது கைவிரல் நகங்களின் மூலமே அறிந்து கொள்ளலாம். அது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்? அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பொதுவாக விரல் நகங்களின் அடிப்பகுதி சற்று வெளிரிய நிறத்தில் இருப்பதைக் காண்பீர்கள். உங்கள் விரல் நகங்களின் அடிப்பகுதியில் பிறைப்போன்று காணப்படுகிறதா? அப்படி விரல் நகத்தில் தெரியும் பிறை உடலில் உள்ள பிரச்சனைகளைத் தான் சுட்டிக் காட்டுகிறது என்பது தெரியுமா? நகங்களில் உள்ள பிறையின் நிறம், வடிவம் அல்லது அளவு நோயின் இருப்பை சுட்டிக் காட்டுவதால், இதுக்குறித்து விரிவாக தெரிந்து கொண்டால், ஆரம்பத்திலேயே உடலில் உள்ள பிரச்சனையை கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ள வசதியாக இருக்கும் மற்றும் விரைவில் சரிசெய்யவும் முடியும்.

இப்போது ஒவ்வொரு நகங்களில் வரும் பிறை எந்த ஆரோக்கிய பிரச்சனையைக் குறிக்கிறது என்பதை விரிவாக காண்போம் வாருங்கள்.


சிறிய விரல்

சிறிய விரல் சிறுநீரகங்கள், சிறுகுடல் மற்றும் இதய செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிலும் சிறிய விரலில் பிறையானது மிகவும் பெரிதாக தெரிந்தால், அது உயர் இரத்த அழுத்தத்தின் விளைவாகவும் இருக்கலாம்.

மோதிர விரல்

மோதிர விரல் இனப்பெருக்கம் மற்றும் நிணநீர் அமைப்புகளின் செயல்பாட்டுடன் தொடர்புடையது. ஒருவரது மோதிர விரலில் பிறையானது நன்கு வெளிப்படாமல் லேசாக தென்பட்டால், அது செரிமான பிரச்சனைகளைக் குறிக்கிறது.

நடு விரல்

நடு விரல் மூளை மற்றும் இதய அமைப்பின் செயல்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. நடு விரலில் பிறை இல்லாவிட்டால், அது வாஸ்குலர் பிரச்சனைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறிக்கிறது.

ஆள்காட்டி விரல்

ஆள்காட்டி விரல் பெருங்குடல், கணையத்துடன் தொடர்புடையது. எனவே பெருங்குடல், கணையத்தின் முறையற்ற செயல்பாடு அல்லது நாள்பட்ட ENT நோய்கள் இருந்தால், ஆள்காட்டி விரலில் உள்ள பிறை தென்படாது அல்லது மிகவும் சிறியதாக தென்படும்.

பெருவிரல்

பெருவிரல் அல்லது கட்டைவிரல் நுரையீரல் மற்றும் மண்ணீரலின் வேலையைப் பிரதிபலிக்கிறது. கைவிரல் நகங்களிலேயே நன்கு புலப்படும் மற்றும் முழு விரல் நகத்திலும் 25%-த்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது.

ஆனால் புகைப்பிடிப்பவர்களுக்கு இது மிகவும் சிறியதாகவோ அல்லது தமனி உயர் இரத்த அழுத்தம் இருக்கும் போது பிறை பெரியதாகவோ இருக்கலாம்.

மிகப்பெரிய பிறை

விரல் நகத்தின் மூன்றில் ஒரு பகுதியை பிறை ஆக்கிரமிக்கும் போது, அது பெரியதாக கருதப்படுகிறது. அதோ இவை இதய அமைப்பு, இதயத் துடிப்பு சீர்குலைவு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் போன்றவற்றை குறிக்கிறது.

பெரிய அளவிலான பிறை பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் உடல் செயல்பாடுகளுடன் தொடர்புடையவர்களிடம் காணப்படும். ஒருவர் விளையாட்டுக்களில் ஈடுபடாமல், விரல் நகங்களில் பிறை பெரியதாக இருந்தால், அது அதிகளவு மன அழுத்தத்தைக் குறிக்கிறது.

சிறிய பிறை

சிறிய பிறை விரல் நகங்களின் க்யூட்டிகிளுக்கு பின் இருப்பதால் சரியாக காண முடியாது. மேலும் இது குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் சுற்றோட்டக் கோளாறுகளைக் குறிக்கிறது. அதோடு இம்மாதிரியானது பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி, மோசமான வளர்சிதை மாற்றம் அல்லது இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

ஒருவேளை பிறை மற்ற நகங்களில் இருந்து குறுக்குவெட்டு கோடுகளுடன் பிரிக்கப்பட்டிருந்தால், அது இரத்த சர்க்கரை அளவு பிரச்சனை மற்றும் சர்க்கரை நோயின் சாத்தியமான வளர்ச்சியைக் குறிக்கிறது.

பிறை எதுவும் தெரியவில்லையா?

உங்கள் கைவிரல் நகங்களில் பிறை எதுவும் தெரியவில்லையா? அப்படியானால் அச்சம் கொள்ள வேண்டாம். சிலருக்கு நகங்களின் கட்டமைப்பின் உடலியல் விவரக்குறிப்புகள் காரணமாக வெளிப்படாமல் இருக்கலாம்.

இருப்பினும், உங்கள் நகங்களில் ஏற்கனவே பிறை தெரிந்து, திடீரென்று தெரியாமல் இருந்தால், அது நீங்கள் எடுக்கும் மருந்துகளால் சுற்றோட்டக் கோளாறின் அறிகுறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஆய்வு ஒன்றும், நகங்களில் பிறை இல்லாமல் இருப்பது, தைராய்டு சுரப்பி கோளாறு மற்றும் வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து குறைபாட்டு இணைக்கப்பட்டுள்ளதைத் தெரிவிக்கிறது.

விரல் நக பிறையின் நிற மாற்றம்

சாம்பல் நிற பிறை – நகங்களில் சாம்பல் நிறத்தில் பிறை தென்பட்டால், அது தீவிர களைப்பு, செரிமான கோளாறுகள் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுவதில் உள்ள சிரமத்தைக் குறிக்கிறது.

வெள்ளை நிற பிறை – நகங்களில் வெள்ளை நிறத்தில் பிறை தென்பட்டால், அது ஆரோக்கியத்தைக் குறிக்கிறது.

ஊதா நிற பிறை – ஊதா நிறத்தில் நகங்களில் பிறை இருந்தால், அது மோசமான இரத்த சுற்றோட்டம் மற்றும் உறுப்புக்கள் மற்றும் திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காததைக் குறிக்கிறது. மேலும் இம்மாதிரியான பிறை உள்ளவர்கள் அடிக்கடி தலைச்சுற்றல் மற்றும் தலைவலியை சந்திப்பார்கள்.

பிங்க் நிற பிறை – பிங்க் அல்லது சிவப்பு நிற பிறை, உடல் செயல்பாடு குறைவாக இருப்பது மற்றும் நுரையீரல் பிரச்சனைகளைக் குறிக்கிறது.

கருப்பு நிற பிறை – நகங்களில் கருப்பு நிற பிறை வருவது என்பது ஒரு அசாதாரண மற்றும் ஆபத்தான அறிகுறி. இது உடலில் அதிகப்படியான மெட்டல் நச்சு இருப்பதன் அறிகுறியாகும்.