உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? விட்டமின் குறைபாடாம்…!

1055

தற்போதைய தலைமுறையில் மாறிவரும் உணவு பழக்கத்தினால் உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்படுகிறது.

நம் உடலில் ஏற்படும் ஒரு சில அறிகுறிகளை வைத்தே வைட்டமின் குறைபாட்டை நாம் அறியலாம். வைட்டமின் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சரிசெய்து கொள்ளவில்லை எனில் பிற்காலத்தில் பிறநோய்கள் ஏற்பட காரணமாக அமைந்துவிடும்.

தற்போது வைட்டமின் குறைபாடு காட்டும் அறிகுறிகள் என்னென்ன, அதற்கான தீர்வு என்ன என்பதையும் பார்ப்போம்.

நாம் உட்காரும் போதும் , எழுந்திருக்கும் போதும், கைகளை மடக்கும்போதும், தலையை திருப்பும்போதும் டிக் டிக் என்று எலும்புகளில் சத்தம் கேட்டால் உடலில் கால்சியம் சத்து குறைவாக உள்ளது என்பதை நாம் அறியலாம். ஆகவே கால்சியம் சத்து நிறைந்துள்ள உணவுகளான பால், தயிர், மீன், பன்னீர், கீரை போன்றவற்றை சாப்பிட கால்சியம் குறைபாடு நீங்கும்.


பல் தேய்க்கும்போதும், பழங்களை கடித்து உண்ணும்போதும் இரத்தம் கசிந்தாலும், நாக்கில் வெடிப்பு, புண்கள் ஏற்பட்டாலோ உடலில் வைட்டமின் C குறைவாக உள்ளதை காட்டும் அறிகுறிகள். உடலில் வைட்டமின் C குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். இதற்கு நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பப்பாளி போன்ற பழங்களை சாப்பிடவேண்டும்.

முடி உதிர்தல், நகம் உடைதல் , தோல் உரிதல் போன்றவை வைட்டமின் B7 குறைவை காட்டும். இதற்கு முட்டை, மீன், பாதாம், வாழைப்பழம், வேர்க்கடலை போன்ற உணவுகளில் வைட்டமின் B7 சத்துக்கள் நிறைந்துள்ளது.

உதட்டின் சிகப்பு நிறம் குறைவது,முகம் வெளுத்து காணப்படுவது போன்றவை உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதை காட்டும். ஆகவே முருங்கைக்கீரை, பீட்ரூட், ஆட்டு ஈரல், ஆப்பிள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டும்.

பாத வெடிப்பு, கண்கள் சிவப்பாக இருத்தல் போன்றவை வைட்டமின் B சத்து குறைப்பாட்டை காட்டும்.

இதற்கு காய்கறிகள் , பழங்கள், கீரை வகைகள் போன்றவற்றை சாப்பிடவேண்டும்.