உடல் எடையை குறைக்க முயன்ற 28 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

363

ஸ்காட்லாந்தில்..

சிக்கென சிண்ட்ரல்லா பேபியாக இருக்க எந்த பொண்ணுக்கு தான் ஆசை இருக்காது? அது உலகம் பூரா இருக்கிற பெண்களின் இயல்பான அக்கறையில் முக்கியமானது தானே? ஆனா, அதுக்கான வழிமுறைகளைத் தேர்ந்தெடுப்பதுல தான் பெண்கள் ரொம்பவே கவனமா இருக்கணும்.

பாவம்… 28 வயசு தான் ஆகுது. இத்தனைக்கும் பலரைப் போல அத்தனை பருத்த உடம்பெல்லாம் கிடையாது. ஆனாலும் உடல் எடையைக் குறைத்து, இடையைத் தூக்கலாக காட்ட சிகிச்சை எடுத்துக் கொண்ட துருக்கியைச் சேர்ந்த இளம்பெண் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஷானன் போவ் (28). இவர் தன்னுடைய உடல் எடையைக் குறைப்பதற்காக, துருக்கியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார்.


இவருக்கு இரைப்பை பேண்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சிகிச்சையில் உணவு உண்ணும் அளவைக் குறைக்க, வயிற்றின் மேல் பகுதியைச் சுற்றி அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பேண்ட் பொருத்தப்படுகிறது.

இந்தச் சிகிச்சையை மேற்கொள்ள ஒரு மணிநேரம் மட்டுமே ஆகும். இந்நிலையில் இந்தச் சிகிச்சையின் போது அந்த இளம்பெண் உயிரிழந்து உள்ளார். எந்தச் சிக்கலால் மரணம் ஏற்பட்டது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

போவின் காதலன், ரோஸ் ஸ்டிர்லிங், தனது காதலிக்கு ஃபேஸ்புக்கில் அஞ்சலி செலுத்தி உள்ளார். அதில் “என் தேவதையை தூங்கு, என்றென்றும் எப்போதும் உன்னை நேசிக்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலக செய்தித் தொடர்பாளர் அவரது மரணத்தை உறுதிப்படுத்தினார். துருக்கியில் இறந்த ஒரு பிரிட்டிஷ் நாட்டவரின் குடும்பத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.