உண்மையை மறைத்த ஒரு பெண்… கைக்குழந்தைகள் முதல் முதியவர் வரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 40 பேருக்கு சிக்கல்: ஒரு கோப செய்தி!

496

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து மாத இரட்டைக் குழந்தைகள் முதல் 77 வயது பெண்மணி வரை, மொத்தம் 40 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. அதற்கு காரணம் ஒரே ஒரு பெண்!

தனக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தும், மாஸ்க் கூட அணியாமல் இறுதிச்சடங்கு ஒன்றிற்காக அவர் அரிசோனாவிலிருந்து மேற்கு விர்ஜினியா வரை விமானத்தில் பயணித்துள்ளார்.

அத்துடன் அவரது கணவருக்கும் மகனுக்கும் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த விடயத்தையும் அவர் மறைத்துவிட்டிருக்கிறார். கொரோனா அறிகுறிகள் கொண்ட அந்த பெண்ணின் படமோ பெயரோ இந்த செய்தியில் வெளியிடப்படவில்லை.

Polly Williams என்ற அந்த குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை தற்போது வெளியிட்டிருக்கிறார்.


விமான நிலையத்திலிருந்து அந்த பெண் வரும்போதே சோர்வாக இருந்திருக்கிறார். ஆனால், விமான பயண களைப்பு மற்றும் தூக்கமின்மையால் அவர் அப்படி இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறார் Polly.

உறவினர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறுதிச் சடங்கு நடந்த வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வந்திருக்கிறார்கள்.

இத்ற்கிடையில், சில நாட்களுக்குள் அந்த பெண்ணின் உடல் நிலை மோசமாகியிருக்கிறது. ஆனாலும் அவர் உண்மையைச் சொல்லவில்லையாம்.

அப்போது எதிர்பாராதவிதமாக, அந்த பெண்ணின் கணவரிடமிருந்து Pollyக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது, அதாவது அவருக்கும் அவரது மகனுக்கும் கொரோனா என்று… அப்போதுதான் மற்றவர்களுக்கு அந்த பெண் மீது சந்தேகம் வந்துள்ளது.

ஆனால், அதற்குள் அந்த குடும்பத்திலுள்ள குழந்தை ஒன்றிற்கு கொரோனா தொற்றிவிட்டது. அவ்வளவுதான், அதைத் தொடர்ந்து வரிசையாக ஒன்று, இரண்டு, மூன்று என மொத்தம் 40 பேருக்கு காட்டுத்தீ போல் கொரோனா பரவியதாக தெரிவிக்கிறார் Polly.

ஐந்து மாத இரட்டைக் குழந்தைகள் முதல் 77 வயது பெண்மணி வரை பாரபட்சமின்றி அனைவரையும் ஒரு வழியாக்கிவிட காரணமாக இருந்த அந்த உறவினர் பெண் மீது குடும்பமே கடும் கோபத்தில் இருக்கிறதாம்.

அவருக்கு உடல் நலமில்லை என்பது வருத்தமான விடயம்தான், ஆனால், அவர் உண்மையை மறைத்து இத்தனை பேரை கஷ்டப்படுத்திவிட்டாரே என்பதுதான் கோபம் என்கிறார் Polly.Pollyக்கும் கொரோனா தொற்றினாலும், அவர் குணமடைந்துவிட்டார், ஆனால், அவரது தாயின் நிலைமை இன்னமும் மோசமாக இருக்கிறதாம்.