உன் தங்கையை உயிரோட எரிச்சிட்டேன்.. கொலை செய்துவிட்டு செல்போனில் அழைத்து தகவல் சொன்ன உறவினர்!!

354

மத்தியபிரதேசத்தில்..

மத்தியபிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் வசித்த பிரகாஷ் என்பவர் 6 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவரின் மனைவி நிர்மலா மட்டும் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று பிரகாஷின் அண்ணன் சுரேஷ், நிர்மலா வீட்டுக்கு வந்து, “என் தம்பியின் தற்கொலைக்கு நீதான் காரணம்.

உன்னால்தான் அவன் தற்கொலை செய்துகொண்டான்” என நிர்மலாவிடம் சண்டையிட்டு, அவரை தாக்கியிருக்கிறார். மேலும், அவரை வெளியே இழுத்துவந்து, பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கிறார். இதில், நிர்மலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து,

நிர்மலாவின் சகோதரனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, “என் தம்பியின் தற்கொலைக்குக் காரணமான உன் சகோதரியை உயிரோடு எரித்துவிட்டேன்” எனத் தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்டு பதறிய நிர்மலா குடும்பத்தினர், “நாங்கள் இன்று அவளை வீட்டிற்கு அழைத்து வரத் திட்டமித்திருந்தோம்.


ஆனால், அவர்கள் அவளைக் கொன்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். அவர்களிடமிருந்து எங்கள் மகளைக் காப்பாற்றுங்கள்” எனக் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, ஏற்கெனவே கொலை செய்யப்பட்டு எரிந்து கிடந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது. மேலும், சுரேஷை கைது செய்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.