உலகம் எதிர்கொள்ளப்போகும் பாரிய ஆபத்து! எச்சரிக்கை விடுத்துள்ள நிபுணர்கள்!!

912

உலகில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத உணவுப் பஞ்சம் இனிமேல் வரப் போகிறது என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தவிர்ப்பதற்கு உலக நாடுகள் உடனடியாக செயற்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலையடுத்து ஏற்படவுள்ள இந்த உணவுப் பஞ்சத்தைத் தவிர்க்க முதல் நடவடிக்கையாக வறிய மக்களிடையே சிறந்த சமூக பாதுகாப்பு செயற்பாடுகள் அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இல்லாவிட்டால் அவர்களுக்குத் தேவையான அடிப்படை போஷாக்கு கிடைக்காமல் போய் விடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் கூறுகிறார்.


வறுமை நீடித்தால் மில்லியன் கணக்கிலான சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அன்டோனியா குட்டெரஸ் மேலும் கூறுகிறார்.

இந்நிலையில் நிலைமை மேலும் மோசமாவதைத் தடுக்க குட்டெரஸ் மூன்று அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.

மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களை இனம் கண்டு அங்கு நிலைமை மேலும் மோசமாவதைத் தவிர்க்க உடினடியாக நடவடிக்கை எடுத்தல், சமூக பாதுகாப்பை வலுப்படுத்தல். இளம் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மாருக்கு உரிய போஷாக்கு சத்தினை பெறுவதற்கு உதவுவதல், ஆகியவையே மேற்படி மூன்று அம்சத் திட்டமாகும்.

இதேவேளை கொரோனா வைரஸ் மற்றும் முடக்கல் நிலை காரணமாக ஏற்பட்டுள்ள மந்த நிலையினால் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினிச்சாவை எதிரநோக்கும் அபாய நிலை இருப்பதாக வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்