உலகின் நம்பர் 1 பணக்கார பிச்சைக்காரர் : அவரது மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

4016

பிச்சைக்காரர்..

பொதுவாக பிச்சை எடுப்பவர்கள் என்றால் நம்மில் உருவாகும் முதல் பிம்பம் அவர்கள் குறித்த உருவ தோற்றமும், அவர்களின் ஏழ்மையான பொருளாதார நிலையும் தான். ஆனால் மும்பை சேர்ந்த பாரத் ஜெயின்(Bharat Jain) என்ற பிச்சைக்காரர் ஒருவர் நம்முடைய இந்த பிம்பத்தை சுக்குநூறாக உடைத்து எறிந்துள்ளார்.

மோசமான பொருளாதார நிலை காரணமாக பாரத் செயின் பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை, மும்பை வீதிகளில் பிச்சை எடுக்க தொடங்கியுள்ளார்.

சத்ரபதி சிவாஜி டெர்மினல், ஆசாத் மைதானம் மற்றும் மும்பையின் பல தெருக்களில் பிச்சை எடுக்கும் பாரத் செயின் ஒரு நாளைக்கு மக்கள் தயவில் சுமார் 2000 முதல் 2500 ரூபாய் வரை வசூல் செய்கிறார்.


அதனடிப்படையில் மாதத்திற்கு 60,000 முதல் 75,000 வரை பிச்சை எடுப்பதன் மூலம் பாரத் செயின் வசூல் செய்கிறார். இவ்வாறு பிச்சை எடுத்து பிச்சை எடுத்து பாரத் ஜெயின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ 7.5 கோடியாகும்.

எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் தகவல் படி, மும்பை வீதிகளில் பிச்சை எடுக்கும் பாரத் ஜெயின் உலகின் முதல் பணக்கார பிச்சைக்காரர் என தெரியவந்துள்ளது.

பாரத் ஜெயின் திருமணமானவர் இவரது குடும்பத்தில் மனைவி, இரண்டு மகன்கள், தந்தை மற்றும் சகோதர் உள்ளனர். அவரது இரண்டு மகன்களும் கான்வென்ட்டில் பள்ளி படிப்பை முடித்துள்ளனர்.

அத்துடன் இவர்களுக்கு மும்பையில் 1.2 கோடி மதிப்புள்ள 2 படுக்கையறைகள் கொண்ட பிளாட் வீடு உள்ளது, மேலும் மாதம் 30 வருமானம் தரக்கூடிய இரண்டு கடைகள் மும்பை தானே பகுதியில் உள்ளது.

பாரத் ஜெயின் தற்போது தன்னுடைய குடும்பத்துடன் பரேலில் உள்ள ஒற்றை படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். கோடிகளுக்கு சொந்தக்காரராக மாறிய பின்னும் மும்பை வீதிகளில் பாரத் செயின் பிச்சை எடுத்து வருகிறார்.