உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா?

393

செம்மறியாடு………..

ஸ்கொட்லாந்தில் அரியவகை செம்மறியாடு ஒன்று உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தில் Texel வகை செம்மறியாடு ஒன்று அதன் உரிமையாளரால் சுமார் 368,000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட Texel வகை செம்மறியாடுகளின் விற்பனை விழாவில் Charlie Boden என்பவரின், பிறந்து ஆறு மாதமேயான Texel செம்மறியாடுக்கு உலககின் மிக அதிகமான விலை கிடைத்துள்ளது.


இது பிரித்தானியாவில் மட்டுமின்றி உலக அளவில் சாதனை விலை என்றே கூறப்படுகிறது.

இதுவரை Texel செம்மறியாடுக்கு அதிகபட்சமாக 2009 ஆம் ஆண்டு 230,000 பவுண்டுகள் விலை கிடைத்துள்ளதே சாதனையாக கருதப்பட்டது. அந்த சாதனை வியாழனன்று முறியடிக்கப்பட்டுள்ளது. டெக்சல் செம்மறி ஆடுகள் நெதர்லாந்து கடற்கரையில் ஒரு சிறிய தீவில் இருந்து முதன் முதலில் உருவாகின.

தற்போது சாதனை விலைக்கு வாங்கப்பட்ட இந்த டெக்சல் செம்மறி ஆடானது மூன்று விவசாயிகளால் கூட்டாக வாங்கப்பட்டுள்ளது. இனப்பெருக்கம் மூலம் தங்கள் முதலீட்டை திரும்பப் பெறுவார்கள் என்று மூன்று விவசாயிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.