எந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த நேரத்தில் குளித்தால்.. அதிர்ஷ்டம் கொட்டும் தெரியுமா?

1038

பொதுவாகவே குளியல் என்பது, அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாகவே இருக்க வேண்டும் என்று, நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். ஆனால், இந்த காலகட்டத்தில், காலை எழுந்ததும் குளிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது, என்று சொன்னால் அது பொய்யாகாது.

காலையில் எழுந்து வேலைக்கு செல்வதாக இருந்தால் மட்டுமே, குளிக்கும் பழக்கம் இன்று நம் எல்லோரிடத்திலும் வந்துவிட்டது. ஆனால், ஒரு சிலர் காலை எழுந்த உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் இன்றளவும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

ஜோதிட சாஸ்திரப்படி, எந்த மாதத்தில் பிறந்தவர்கள், காலை எந்த நேரத்திற்குள் குளித்தால் அவர்களுக்கு, அன்றைய தினம் அதிர்ஷ்டமான தினமாக செல்லும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

நீங்கள் சித்திரை, வைகாசி இந்த இரண்டு மாதத்தில் பிறந்திருந்தால், காலை 6 மணியிலிருந்து 8 மணிக்குள் குளிக்க வேண்டும். தினந்தோறும் இந்த நேரத்தில் குளிக்க முடியவில்லை என்றாலும், குறிப்பிட்ட, நீங்கள் பிறந்த அந்த மாதத்திலாவது, இந்த நேரத்தில் குளிக்க பாருங்கள்.


ஆனி, ஆடி இந்த இரண்டு மாதத்தில் பிறந்தவர்கள் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். முடியாதவர்கள் நீங்கள் பிறந்த அந்த குறிப்பிட்ட மாதத்திலாவது, இந்த நேரத்தில் குளிக்க பாருங்கள்.

ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, இந்த மாதங்களில் பிறந்தவர்கள் காலை 6 மணியிலிருந்து 8 மணிக்குள் குளித்து விட வேண்டும். முடியாதவர்கள் நீங்கள் பிறந்த அந்த குறிப்பிட்ட மாதத்திலாவது இந்த, நேரத்தில் குளிப்பது மிகவும் நல்லது.

மார்கழி, தை இந்த இரண்டு மாதங்களில் நீங்கள் பிறந்தவர்களாக இருந்தால், காலை 6 மணியிலிருந்து 6.50 மணிக்குள் குளிக்க முயற்சி செய்யுங்கள். அப்படி முடியவில்லை என்றால் நீங்கள் பிறந்த இந்த அந்த மாதத்தில் மட்டுமாவது, இந்த நேரத்தில் குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

மாசி, பங்குனி இந்த இரண்டு மாதங்களில் நீங்கள் பிறந்தவர்களாக இருந்தால், காலை 6 மணியிலிருந்து 8 மணிக்குள் குளிக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் நீங்கள் பிறந்த அந்த மாதத்திலாவது காலை நேரத்தில் இந்த நேரத்தில் குளிக்க பழகிக்கொள்ளுங்கள்.

இந்த நேரத்தில் தான் குளிக்க வேண்டும் இன்று எந்த கட்டாயதோடும் குறிப்பிடப்படவில்லை. இந்த நேரத்தில் குளிக்க வில்லை என்றாலும், உங்களுக்கு கெடுதல் நடக்கும் என்பது கிடையாது. இந்த நேரத்தில் குளித்து பாருங்கள்! உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சின்னச் சின்ன மாற்றங்கள் கட்டாயம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்டுள்ள எதையுமே கடைபிடிக்க முடியாதவர்கள் கூட, நீங்கள் பிறந்த மாதத்தில், நல்லெண்ணெய் தேய்த்து, தலைக்கு குளிக்கும் போது, நீங்கள் பிறந்த மாதத்திற்கு, எந்த நேரத்திற்குள் குளிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதோ, அந்த நேரத்திற்குள் குளிக்க முயற்சி செய்யுங்கள்.