“என்னை உறவுக்குக் கட்டாயப்படுத்துகிறார்” – மாமியார் மீது காவல்துறையில் புகாரளித்த மருமகள்!!

334

குழந்தை பிறக்கவில்லை என்றும், தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும், அலோக் உபாத்யா தன் மனைவி மீது குற்றம்சாட்டி கொடுமை செய்துவந்திருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு காஜிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அலோக் உபாத்யா என்பவருடன் 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததிலிருந்தே அந்தப் பெண்ணுக்கு மாமியார் வீட்டில் கொடுமைகள் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த ஆண்டு அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனால், அந்தக் குழந்தை தனக்குப் பிறக்கவில்லை என்றும், தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும், அலோக் உபாத்யா தன் மனைவி மீது குற்றம்சாட்டி கொடுமை செய்துவந்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி அந்தப் பெண் கணவன் வீட்டு குடும்பத்தார் அடித்து விரட்டியதாகத் தெரிகிறது. அதனால் அந்தப் பெண் தன்னுடைய தாய்வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

இதற்கிடையில், அந்தப் பெண்ணின் மாமியார் இந்த மாத தொடக்கத்தில், சமாதானம் பேச மருமகளையும், அவரின் தந்தையையும் வீட்டுக்கு அழைத்திருக்கிறார். அந்தப் பேச்சுவார்த்தையும் கைகலப்பில் முடிந்திருக்கிறது. இந்த நிலையில்தான் காவல்துறையில் அந்தப் பெண் புகார் கொடுத்திருக்கிறார்.

அதில்,“என் நடத்தையில் சந்தேகப்படும் என் கணவர் என்னை அடித்துக் கொடுமைபடுத்துகிறார். என் மைத்துனர் என்னை ஒரு அறையில் அடைத்துவைத்து கொடுமை படுத்தினார்.


என் மாமியார் என்னை அவருடன்உடல் ரீதியாக உறவுக்கொள்ள கட்டாயப்படுத்தி தாக்குகிறார். வரதட்சணைக் கொடுமையில் தொடங்கிய இது தற்போது பல்வேறு வகைகளில் தொடர்கிறது” எனப் புகார் அளித்திருக்கிறார். அந்தப் பெண்ணின் புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.