என் பெற்றோரே என்னுடைய கண்கள்: IAS தேர்வில் சாதித்த பார்வையற்ற பெண்ணின் நெகிழ்ச்சி வார்த்தைகள்…!

364

ஏழை எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பதே தன்னுடைய குறிக்கோள் என தெரிவித்துள்ளார் ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பூர்ண சுந்தரி.

ஐ.ஏஎ்ஸ்., தேர்வில் மதுரை மணிநகரத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பூர்ண சுந்தரி 25, வெற்றி பெற்றுள்ளார்.

இவரது தந்தை முருகேசன் விற்பனை பிரதிநிதி. தாயார் ஆவுடைதேவி இல்லத்தரசி.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,முதல் வகுப்பு படிக்கும்போது பார்வை குறைபாடு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்கவில்லை.


அரசு பள்ளியில் படித்தேன். 12ம் வகுப்பு முடித்த பின்னர் தனியார் கல்லூரியில் சேர்ந்து பிஏ ஆங்கிலம் படித்தேன்.

மூன்று ஆண்டுகளாக பாண்டியன் கிராம வங்கியின் பணியாற்றுகிறேன், கல்லூரி படிப்பு முடிந்ததும் அறக்கட்டளையின் மூலம் பயிற்சி பெற்றேன், அப்போது என் தோழிகள் எனக்கு படித்துக் காட்டுவார்கள்.

என் பிறந்தநாளான இன்று மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது, ஏழை எளிய மக்களுக்காக உழைப்பேன் என தெரிவித்துள்ளார்.