என் மரணத்திற்கு காரணம் அப்பா, அம்மா தான்.. கணவரை பறிகொடுத்த இளம்பெண் விபரீத முடிவு!!

176

சென்னையில் கணவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட நிலையில், இளம் மனைவியும் துக்கம் தாளாமல் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (25). mechanic வேலை பார்த்து வந்த இவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த ஷர்மிளா (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமணத்திற்கு ஷர்மிளாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரவீன் படுகொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் உட்பட 5 பேரை ஆணவக்கொலை செய்ததாக பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தனது கணவர் வீட்டில் வசித்து வந்த ஷர்மிளா, கடந்த 14ஆம் திகதி வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.


உடனடியாக அவர் உறவினர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார். பொலிஸார் அவரது உடலைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஷர்மிளாவின் டைரி ஒன்றிய கைப்பற்றினர்.

அதில், ‘என்னால் என் கணவர் பிரவீன் இல்லாமல் இருக்க முடியல. நான் சாகப் போறேன். என் சாவிற்கு காரணம் தந்தை துரைக்குமார், தாய் சரளா, சகோதரர்கள் நரேஷ், தினேஷ் ஆகியோர் தான்.

பிரவீனை சாகடிச்சு என்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க. எங்களை வாழ விடாம பண்ணிட்டாங்க. அவன் இல்லாத இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்’ என எழுதப்பட்டிருந்தது.