ஒன்றாக ஆற்றில் உயிரை மாய்த்துக் கொண்ட சகோதரிகள்.. பின்னணியில் அக்கா கணவர்!!

297

சகோதரிகள் இருவர் கைகளை கட்டிக் கொண்டு ஒன்றாக ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், மான்காபூர் கிராம் பகுதியை சேர்த்தவர் சுரேஷ் குமார். இவருக்கு அனிதா, சுனிதா (19), புனிதா (17) என மூன்று மகள்கள் உள்ளனர்.

இவருடைய முதல் மகள் அனிதாவுக்கு அசோக் குமார் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. இரண்டாவது மகள் சுனிதா 12 -ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். மூன்றாவது மகள் புனிதா 10 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை வெளியில் சென்ற சுனிதாவும், புனிதாவும் வீடு திரும்பாததால் ஊர் மக்களுடன் தந்தை சுரேஷ் குமார் மகள்களை தேடியுள்ளார். இதையடுத்து, இருவரது உடல்களும் பிசுஷி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பின்னர், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், ஆற்றில் இருந்து சகோதரிகளின் உடல்கள் மீட்கப்பட்டது.

இருவரும் துணியால் கைகளை கட்டி ஒன்றாக ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது.


இதுகுறித்து தந்தை சுரேஷ் குமார் கூறுகையில், “எனது மகள்கள் விபரீத முடிவு எடுத்ததற்கு முதல் மகள் அனிதாவின் கணவர் அசோக் குமார் தான் காரணம். அவர் தான் என்னுடைய மகள்களை தவறான முறையில் துன்புறுத்தியுள்ளார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.