ஒரு கப் தேநீரின் விலை ஒரு லட்சம்! எங்கு தெரியுமா?

21

துபாயில் ஒரு கப் தேநீரின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதன் ரகசியம் குறித்து இங்கு காண்போம்.

விரும்பி அருந்தப்படும் பானம்

இந்தியாவில் தேநீர் என்பது பரவலான மக்களால் விரும்பி அருந்தப்படும் பானம் ஆகும்.

குறைந்தபட்ச விலையாக ரூ.10க்கு தேநீர் விற்கப்படும் அதே வேளையில், மும்பை தாஜ் ஹொட்டலில் இதன் விலை ரூ.650 ஆகும்.

இதை விட அதிக விலைக்கு ஒரு இடத்தில் தேநீர் விற்கப்படுகிறது. துபாயில் உள்ள ஹொட்டலில்தான் ஒரு லட்சம் ரூபாய்க்கு தேநீர் விற்பனையாகிறது.

தங்கத் தூள் தூவிய தேநீர்


இந்திய வம்சாவளியான Sucheta Sharma ‘போஹோ கஃபே’ என்ற பெயரில் உணவகம் ஒன்றை துபாயில் நடத்தி வருகிறார்.

இங்குதான் Gold Karak என்ற பெயரில் தங்கத் தூள் தூவிய தேநீர், அருகில் 24 காரட் தங்க இலையில் வைத்த மஃபினுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதன் விலைதான் ஒரு லட்சம் ஆகும்.

இந்த தேநீர் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. Vlogger ஒருவர் இந்த உணவகத்தின் உள்ளே சென்று கோல்ட் தேநீர் உள்ளடங்கிய Home tour ஒன்றை வீடியோவாக எடுத்து வெளியிட்டதன் மூலம் வைரலாகியுள்ளது.

அவரது வீடியோவில் தங்கத் துகள்களை மேற்பரப்பில் தூவிய தேநீர் வெள்ளிக்கோப்பையில் வழங்கப்படுகிறது. அருகில் பிறை வடிவ பிரஞ்சு மஃபின் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.