தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்த பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவேளை உணவுக்கு கூட வழியின்றி தவித்து வருவது ப ரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.ஓசூர் அருகே உள்ள சிவலிங்கபுரம் மலை கிராமத்தை சேர்ந்தவர் 27 வயதான பரந்தாமன். இவருடன் பிறந்த நால்வரில் மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
மனநலம் பா திக்கப்பட்ட தந்தை எலும்பு முறிவு ஏற்பட்ட தாய், மா ற்றுத்திறனாளியான சகோதரன் சகாதேவன் ஆகியோருடன் பரந்தாமன் வசித்து வருகிறார். உடல் வளர்ச்சி குறைந்த இவர் சிறுவயதிலிருந்தே நாடகம், தெருக்கூத்து ஆகியவற்றில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
எம்.ஏ. சினிமா படித்துள்ள பரந்தாமன், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். ஊரடங்கால் தற்போது அந்த வருமானமும் இல்லாததால் ஒரு வேளை உணவிற்கே அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இவரது குடும்பம்.
எவ்வித வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சிரிப்பு, மகிழ்ச்சி என்பது இந்த நகைச்சுவை கலைஞரின் குடும்பத்திற்கு கேள்விக்குறியாகியுள்ளது. வேதனைமிக்க தன் குடும்பத்தை காப்பாற்ற நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் யாரேனும் உதவுவார்களா என்பது பரந்தாமனின் ஏ க்கமாக உள்ளது.