ஒரே அறையில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவிகள்… கதறிய தோழிகள்!!

338

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வீட்டின் ஒரே அறையில் கல்லூரி மாணவிகள் இருவர் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,

மாணவிகளின் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அவினாசி, பழங்கரை லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மருதாசலமூர்த்தி. இவருடைய மகள் அவந்திகா(19).

அதே போன்று அவினாசி கங்கவர் வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகள் மோனிகா(19). அவந்திகாவும், மோனிகாவும் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்கள்.

இருவரும் ஒரே பாடப்பிரிவில் படித்து வந்த நிலையில், கல்லூரி செலவுகளுக்காக அவந்திகாவும், மோனிகாவும் தினமும் கல்லூரிக்கு சென்று வந்த பின்னர், அருகிலேயே உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலைப் பார்த்து வந்துள்ளார்கள்.

நேற்று பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் அவந்திகா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவந்திகாவைப் பார்ப்பதற்காக மோனிகா அவந்திகாவின் வீட்டிற்கு வந்துள்ளார்

இந்நிலையில் நேற்று மாலை, அவந்திகாவின் வீட்டில் உள்ள அறை ஒன்றில் தோழிகள் இருவரும் தனித்தனியாக தூக்கில் சடலமாக தொங்கினார்கள். தோழிகள் இருவரும் ஒரே அறையில் இப்படி தனித்தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்


அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அவினாசி போலீசார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து,

கல்லூரி மாணவிகள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். ஒரே அறையில் தோழிகள் இருவர் தூக்கில் தொங்கிய சம்பவம் அவினாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,

தங்களது கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவிகளின் தற்கொலை குறித்த தகவல் அவரது தோழிகளிடையேயும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.