கணவருக்காக கலக்கத்துடன் காத்திருக்கும் பெண்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

567

உக்ரைன்…

உக்ரைன் தலைநகரில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் சின்னாபின்னமான வணிக வளாகத்தில் பணிக்கு சென்ற கணவருக்காக பெண் ஒருவர் கண்ணீருடன் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ள Sabina Hrytsai, அவரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்புக்காக காத்திருப்பதாக கண்ணீருடன் பதிவிட்டுள்ளார். எனது அன்பான கணவரைத் தேடுகிறேன் என குறிப்பிட்டுள்ள அவர், சம்பவத்தின் போது அவர் அணிந்திருந்த உடை தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார்.

27 வயதான Sabina Hrytsai அருகாமையில் உள்ள மருத்துவமனைகளிலும் விசாரித்துள்ளார், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. உள்ளூர் காவல்துறையாலும் இதுவரை உறுதியான தகவல் அளிக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது.


தென்மேற்கு கீவ் நகரில் பிறந்து வளர்ந்த இருவரும் திருமணம் முடித்து, ஜூன் 11ம் திகதி தான் முதலாண்டு நிறைவடைந்துள்ளது. திங்களன்று நடந்த குறித்த தாக்குதல் சம்பவத்தில் 21 பேர் கொத்தாக கொல்லப்பட்டுள்ளதுடன், 66 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இரண்டு டசின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 4 மணியளவில் ஏவுகணை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று தமது கணவருக்கு விடுமுறை என்ற போதும், நிர்வாகம் அழைத்ததன் பேரில் பணிக்கு சென்றதாக Sabina Hrytsai தெரிவித்துள்ளார்.

இந்த கோபத்தில் தாம் அவருடன் அப்போது சரியாக பேசிக்கொள்ளவும் இல்லை என தெரிவித்துள்ளார். ஏவுகணை தாக்குதல் சத்தம் தமக்கு கேட்டதாகவும், உடனடியாக தமது கணவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றதாகவும், ஆனால் முடியாமல் போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதும், அவர் உயிருடன் இருப்பார் என நம்புவதாகவும், கண்டிப்பாக அவர் திரும்பி வருவார் என எதிர்பார்ப்பதாகவும் Sabina Hrytsai உருக்கமுடன் தெரிவித்துள்ளார்