என் கணவர் நீண்ட ஆயுளோடு நன்றாக இருக்க வேண்டும்” என்று பூஜை முடித்த கையோடு கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொலைச் செய்து அதிர வைத்திருக்கிறார் பாசக்கார மனைவி.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் மனைவியைக் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம், கவுசாம்பி மாவட்டம், இஸ்மாயில்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷைலேஷ் (வயது 32). இவர் நேற்று இரவு கர்வா சாத் பண்டிகைக்கு மனைவி சவிதா (30) சமைத்த உணவை சாப்பிட்டார்.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஷைலேஷை அவரது மனைவி உணவில் விஷம் வைத்து கொன்றதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவிதாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சவிதா மீது பாரதிய நியாய சன்வாரிதா சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கர்வா சாத் என்பது திருமணமான இந்து பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும் நலனுக்காகவும் விரதம் இருந்து பிரார்த்தனை செய்யும் நாள்.
திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் அமைய விரதம் மேற்கொள்கின்றனர். இந்த நாளில், பெண்கள் சூரிய உதயம் முதல் சந்திரன் உதயம் வரை கடுமையான விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள்.
இந்த ஆண்டு கர்வா சாத் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.