கதறித் துடித்த பெற்றோர் கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்!!

10

திருவள்ளூர் மாவட்டம் தீர்த்தக்கரையம்பட்டியில் வசித்து வருபவர் சுரேஷ் குமார். இவரது மகன் திலக் பிரசன்னா. இவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரைக்கு குடும்பத்துடன் குளிக்க சென்றனர்.

இந்நிலையில் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது தடையை மீறி அவர் கடலில் இறங்கி குளித்ததாகக் கூறப்படுகிறது. திடீரென அலையில் சிக்கிக் கொண்ட சிறுவன் அடித்துச் செல்லப்பட்டான்.

பெற்றோர் கண்முன்னே சிறுவன் அடித்து செல்லப்பட்ட நிலையில் பெற்றோர்களும் அங்கிருந்தவர்களும் அலறித் துடித்தனர். இது குறித்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து மீனவர்கள் கடலில் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர். எச்சரிக்கையை மீறி கடலில் குளித்த சிறுவன் பெற்றோர் கண்முன்னே அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் கடலில் மாயமான சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.