கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பற்குணலிங்கம் ராசலிங்கம்!!

915

கனடாவில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

48 வயதான பற்குணலிங்கம் ராசலிங்கம் என்பவர் கடந்த 14ஆம் திகதி ரொறன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்கார்பாரோவில் உள்ள நீல்சன் வீதி மற்றும் மெக்லெவின் அவென்யூ பகுதியில் நடந்த முந்தைய பாலியல் குற்றங்கள் குறித்து காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

2003 மற்றும் 2014 ஆண்டு காலப்பகுதியில் மூன்று வெவ்வேறு குழந்தைகளை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பற்குணலிங்கம் ராசலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை, பாலியல் குறுக்கீடு மற்றும் பாலியல் தொடுதலுக்கான அழைப்பு ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. குறித்த நபரினால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி பற்குணலிங்கம் ராசலிங்கத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த நபரினால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் 416-808-4200 என்ற எண்ணிலோ அல்லது 416-222-TIPS என்பதற்கு தொடர்பு கொள்ளுமாறு ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.