கனடாவில் தன் மகளுடன் பேசிக்கொண்டிருந்த தந்தை… திடீரென அமைதியான மகள்: பின்னர் கிடைத்த அதிர்ச்சி தகவல்!

437

கனடாவில் தன் மகளுடன் சேட்டிலைட் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஒருவர், திடீரென மகள் அமைதியாக குழப்பமடைந்திருக்கிறார். கனடாவில் உள்ள Buffalo Narrows என்ற கிராமத்தில் உள்ள மர வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக வந்திருந்த Stephanie Blais (44), தன் தந்தையான Hubert Esquirolஉடன் பேசிக்கொண்டிருக்கும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மீண்டும் மீண்டும், ஹலோ, ஹலோ என்று அவர் அழைக்க, மகளிடமிருந்து பதில் ஏதும் இல்லாததால், இணைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் அழைக்க, பதில் இல்லாமல் போகவே, குழம்பிப்போன நேரத்தில் Stephanieயின் கணவரிடமிருந்து Hubertக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அதில் வந்த செய்தி Hubertஐ கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சேட்டிலைட் தொலைபேசியில் சிக்னல் கிடைக்காததால், வீட்டிலிருந்து சற்று தொலைவான இடத்தில் சென்று தந்தையுடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார் Stephanie.

அப்போது, திடீரென பின்னாலிருந்து வந்த ஒரு கரடி அவரை பயங்கரமாக தாக்கியிருக்கிறது. அந்த கரடி அவரை கழுத்தில் தாக்கியிருக்கலாம்போலும், அதனால்தான் அவரால் தொடர்ந்து தந்தையுடன் பேச இயலவில்லை என்று அறிந்தபோது நொறுங்கிப்போனார் Hubert.


சற்று முன் தன்னுடன் பேசிக்கொண்டிருந்த மகள் இப்போது இல்லை என்பதை ஜீரணிக்க முடியாமல் Hubert தவிக்க, அந்த மரவீட்டில்தான் Stephanieயும் அவரது கணவர் Curtis Blaisம் தங்கள் தேனிலவைக் கொண்டாடிய நிலையில், அங்கேயே மனைவி உயிரிழந்ததால் பைத்தியம் பிடித்தது போலாகியிருக்கிறார் Curtis.

இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால், தான் தன் தந்தையை தொலைபேசியில் தொடர்புகொள்வதற்கு சற்று முன்புதான், தன் இரண்டு பிள்ளைகளையும் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார் Stephanie.

இல்லையென்றால், அந்த கரடி குழந்தைகளையும் கொன்றிருக்கக்கூடும். இதற்கிடையில், வனத்துறை அதிகாரிகள் அந்த கரடியைத் தேடி வருகிறார்கள். காரணம், இதுபோன்ற தாக்குதல்கள் அபூர்வமாம், அதாவது பொதுவாக கரடிகள் இப்படி தாக்குவதில்லையாம்.

ஆகவே, அந்த கரடியைக் கண்டுபிடித்து அதற்கு ஏதாவது நோயா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்க இருக்கிறார்கள் அதிகாரிகள்.