கனடாவில் மாயமான 15 வயது சிறுமி… புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட முக்கிய தகவல்!!

458

கனடா…………

கனடாவில் காணாமல் போன 15 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி கிளாரா ஆண்ட்ரூஸ் என்ற 15 வயது சிறுமி Gerrard St East and Main St பகுதியில் காணாமல் போயுள்ளார்.

கிளாரா காணாமல் போன போது கருப்பு நிற ஷார்ட்ஸ் மற்றும் அதே நிறத்தில் சட்டை அணிந்திருந்தார் என பொலிசார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கிளாரா ஆண்ட்ரூஸ் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.


இந்த தகவலை பொலிசார் தங்கள் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுமி கிளாராவை கண்டுபிடிக்க உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.