கனடாவில் இரவு நேரத்தில் காணாமல் போன 10 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான தகவலை Halifax நகரின் பொலிசார் வெளியிட்டுள்ளனர். Audrey White என்ற 10 வயது சிறுமி கடந்த புதன்கிழமை காணாமல் போனார்.
அவர் Bayers Road/Ashburn Avenue பகுதியில் இருந்து தான் இரவு 9.30 மணியளவில் மாயமானார். இது தொடர்பாக சிறுமி Audrey Whiteன் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்தனர். பொலிசார் அப்போது கூறுகையில், Audrey White மோசமான நிலையில் சிக்கியிருப்பதாக எங்களுக்கு எந்தவொரு தகவலும் இல்லை.
அதே நேரம் அவரின் நிலை குறித்து நாங்களும், Audrey White குடும்பத்தாரும் கவலை கொள்கிறோம் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் Audrey White பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான செய்தியை எழுத்துபூர்வமாக ஊடகத்துக்கு பொலிசார் வெளியிட்டுள்ளனர்.