கரப்பான்பூச்சியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நபர்… என்ன நடந்தது தெரியுமா?

853

கரப்பான்………..

சாலையில் அ.டி.பட்டு கிடந்த கரப்பான்பூச்சியை சிகிச்சைக்காக விலங்குநல மருத்துவமனைக்கு எடுத்துவந்த நபரின் செயல் நெகிழ வைத்துள்ளது.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடிபட்டு கிடந்த கரப்பான் பூச்சியை பார்த்துள்ளார். கரப்பான் பூச்சி இறந்துவிடக் கூடாது என எண்ணிய அந்நபர், க்ரதம் பேன் பகுதியில் உள்ள சாய் ராய் விலங்குநல மருத்துவமனைக்கு அதனை தூ.க்.கி சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர் தனு லிம்பப்பட்டனவானிச் என்பவரிடம் அந்நபர் விவரங்களை கூறியுள்ளார்.

அந்நபரின் மனிதநேயத்தை கண்டு வியந்த மருத்துவர், கரப்பான் பூச்சிக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதற்காக அவர் எவ்வித கட்டணமும் வசூலிக்கவில்லை. இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள மருத்துவர் தனு லிம்பப்பட்டனவானிச், “ சாலையோரம் அ.டி.ப்.ப.ட்டு கிடந்த கரப்பான் பூச்சியை பார்த்த நபர் ஒருவர், அதனை உடனடியாக விலங்குநல மருத்துவமனைக்கு எடுத்து வந்தார்.


இது நகைச்சுவை அல்ல, இது ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் இரக்கத்தையும் பரிதாபத்தையும் குறிக்கிறது. ஒவ்வொரு வாழ்க்கையும் விலைமதிப்பற்றது, உலகில் இதுபோன்ற நபர்கள் அதிகமானோர் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இரக்கம் உலகத்தை ஆதரிக்கிறது ” என்று பதிவிட்டுள்ளார்.

கரப்பான் பூச்சி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 50 சதவீதம் மட்டுமே இருந்ததால், அதனை ஆக்சிஜன் உள்ள கலன் ஒன்றில் வைத்த மருத்துவர், பின்னர் அந்த நபரிடம் கரப்பான் பூச்சியை வழங்கியுள்ளார்.

தேவையென்றால் மீண்டும் கரப்பான் பூச்சியை சிகிச்சைக்கு எடுத்துவருமாறு அந்த நபரிடம் மருத்துவர் கூறினார். இந்த சிகிச்சைக்கு அவர் கட்டணம் வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பான மருத்துவரின் முகநூல் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.