கருப்பு கேரட்டின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

1037

கேரட் குடும்பத்தை சேர்ந்த மற்றொரு காய் அதைவிட நமக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும் என்பது நாம் அறியாத ஒரு தகவல்.

மழைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று கருப்பு கேரட். இதனை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதனை மங்கள் முள்ளங்கி என்று அழைக்கிறார்கள்.

இந்த கருப்பு கேரட்டின் நன்மைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்

நிறமூட்டிய உதவும் கருப்பு கேரட்


செயற்கை நிறமூட்டிகளை விட இவை சிறப்பான நிறத்தை கொடுக்கும். கருப்பு கேரட் உணவில் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்தை பெறலாம்.

கருப்பு கேரட்டில் வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றன. வெள்ளை கேரட்டை தவிர அனைத்து கேரட்டிலும் கரோட்டினாய்டுகள் இருக்கிறது. ஆனால் மற்ற கேரட்டுகளை விட இந்த கருப்பு கேரட்டில் அதிக ஆன்டி ஆக்சிடண்ட்கள் காணப்படுகிறது.

கண் ஆரோக்கியத்தை பெற

கருப்பு கேரட்டை சாப்பிட்டு வந்தால் இரவு நேர பார்வையை அதிகரிக்கும். விழித்திரையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க, சர்க்கரை நோயாளிகளுக்கு ரெட்டினோதெரபி என்னும் நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.

குடல் ஆரோக்கியத்தை பெற

கருப்பு கேரட்டில் உள்ள அதிகளவு பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புசத்து எலும்பு மற்றும் பற்களை வலுவாக்க உதவி செய்கின்றன. இதிலிருந்து தயாரிக்கப்படும் கஞ்சி உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

முடக்குவாதம் குணமாக்க

இந்த கருப்பு கேரட்டில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் நமக்கு ஏற்படும் முடக்குவாதம், கீல்வாதம் போன்ற நாள்பட்ட நோய்களை குணமாக்கும்.

புற்றுநோய் வராமல் தவிர்க்க

அதிகளவு ஆன்தோசயசின் இந்த கருப்பு கேரட்டில் இருப்பதால் அது உங்களின் புற்றுநோய் செல்களுக்கு எதிராக எதிர்த்து போராடும். மேலும் இவை உடலில் ஏற்படும் கதிர்வீச்சுகளின் அளவை குறைக்கும்.

கருப்பு கேரட்டை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம். இந்த கருப்பு கேரட்டின் சாற்றை தினமும் குடித்து வந்தால் ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு பிரச்சினைகள் குணமாகம். விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

எடை குறைப்பு

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் கருப்பு கேரட்டை சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறையும். இவை மற்ற கேரட்டுகளை விட அதிக சுவை கொண்டுள்ளது.

வண்ணத்தின் நன்மைகள்

கேரட்டின் இந்த அடர் ஊதா நிறத்திற்கு காரணம் அதிலுள்ள ஆன்தோசயசினின்தான். இது அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த களஞ்சியமாக உள்ளது. நரம்பியல் கோளாறு காரணமாக உங்களுக்கு ஏற்படக்கூடிய அல்சைமர் போன்ற மூளை தொடர்பான நோய்களிலிருந்து இவை நம்மை பாதுகாக்கும்.

கொழுப்பை குறைக்க உதவும்

கருப்பு கேரட்டில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும். இதனால் அதிகளவு கொழுப்பால் ஏற்படும் இதய கோளாறுகளை தடுக்கும்.