கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட பாடகர்.. குடும்பத்துடன் மலேசியாவிற்கு எஸ்கேப்.. கதறும் இளம்பெண்!!

148

சென்னை பரங்கிமலையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரியும் பெண் ஒருவர் சென்னை எஸ்1 செயின்ட் தாமஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சமூக வலைதளங்களில் பிரபலமான குருகுகன் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கியதாகவும், தற்போது குடும்பத்துடன் மலேசியா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் கூறியதாவது:-

சமூகவலைத்தளங்களில் பிரபலமானவர் குருகுகன் , சரிகம உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இவர் கடந்த மே மாதம் ஹேப்பி ஸ்டீரிட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

உடனே எனது செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டார். அப்போது என்னிடம் நட்பாகப் பேசினார். எனக்கு பெண் தேடுவதாகவும், உன்னை காதலிப்பதாகவும் கூறினார். நான் வேறு ஜாதி என்று சொன்னேன்.

அதனால் உங்கள் பெற்றோர் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்றேன். ஆனால், அவர் எனக்கு சாதி பற்றி கவலை இல்லை. என் வீட்டார் சம்மதிக்காவிட்டாலும் உன்னை திருமணம் செய்து கொள்வேன்.

வீட்டில் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் உன்னை தனியாக அழைத்துச் சென்று பார்த்துக் கொள்வேன் என்றார். எப்படியும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று நெருங்கி பழகினார். இதனால் நான் கருவுற்றேன்.


இதையடுத்து ஆகஸ்ட் மாதம் கர்ப்பத்தை கலைக்கச் சொன்னார். முன்பு பேசியபோது ஆகஸ்ட் மாதம் பதிவு திருமணம் செய்து கொள்வோம் என்று கூறினோம்.

நான் கர்ப்பம் ஆனபோது, ​​வா, இப்ப நாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணலாம் என்றேன். ஆனால் அவர் இப்போது விரும்பவில்லை. கொஞ்ச நாள் கழிச்சு.. டைம் எடுத்து செய்யலாம்னு சொன்னார்.

எதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்?.. நானும் படிக்கிறேன்.. சம்பாதிக்கிறேன்.. வாழ்க்கையைப் பார்த்துக்கொள்ளலாம் என்றேன். ஆனால் அவர் மறுத்து என்னை அடித்தார். மேலும் கருவை கலைக்கச் சொல்லி என்னை அடிக்கடி அடிக்க ஆரம்பித்தார்.

கருவை கலைத்தால் தான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதனால் சரி என்று கூறி கருவை கலைத்து விட்டேன். இதையடுத்து எங்கள் குடும்பத்திடம் அவரது குடும்பத்தினர் வந்து பேசினர்.

அப்போது சாதிதான் பிரச்சனை என்றார்கள். கல்யாணத்தைப் பற்றி பேச வேண்டாம். ஜாதி பற்றி தான் பேசினார். உங்கள் வீட்டில் தண்ணீர் கூட குடிக்க மாட்டோம் என்றார்கள்.

ஆனால் குருகுகன் அப்பா அம்மாவுக்கு முன்பே என்னை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். ஆனால் அவரது குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. என்னை தொடர்பு கொள்ள முடியாமல் செய்துவிட்டார்கள்.. இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.

அவர்களது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவர்களால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் போலீசுக்கு வந்தேன்.

குருகுகன் எங்கள் அப்பாவை அழைத்து பதிவு திருமணத்திற்கான அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு வருகிறேன் என்றார்.

அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அவரது நண்பர்கள் குழுவில் கூட சொல்லியிருந்தார். ஆனால் அவரது குடும்பத்தினர் தற்போது என்னிடம் பேசாமல் மலேசியாவிற்கு அழைத்துச் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

உதவி செய்வதாக போலீசார் கூறியுள்ளனர். இவ்வாறு அந்த பெண் கண்ணீர் மல்க கூறினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.