கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!! முழு விபரம் உள்ளே..

1164

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அதிக உணவுகளை சாப்பிட கொடுப்பது வழக்கம். அது தவறு. பேறு காலத்தில் பெண்கள் உடல் நலத்தை கருத்தில் கொண்டு சில உணவுகளை தவிர்க்க வேண்டும். கர்ப்பகாலத்தில் அதிகபட்சம் பத்து கிலோ எடைவரையில் கூடுதலாக இருக்கலாம். அதற்குமேல் அதிகரிக்க கூடாது. கர்ப்பிணி பெண்கள் உணவு பழக்கங்களை எப்படி வைத்துக்கொள்ளலாம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தேநீர் (டீ), குளம்பி (காபி) போன்றவற்றை அருந்தக்கூடாது. காபி, டீ போன்றவற்றை தொடர்ந்து குடிப்பதால் ரத்த அழுத்தம் மாறக்கூடும்

அதிகமாக மசாலா பொருட்கள் சேர்ந்து சமைக்கப்பட்ட காரம் மிகுந்த பொருட்களை தவிர்த்து விட வேண்டும்.

மசாலா பொருட்கள் போல துரித உணவகளும். அதில் அதிக காரம் மற்றும் உப்பு சத்து இருக்கும். மேலும் டப்பாக்களில் பதப்படுத்தப்பட்டு விற்கப்படும் பால் பொருட்களையும் கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டும்.

இறைச்சி மற்றும் முட்டை, பால் ஆகிய பொருட்களை பாதி வேக்காட்டி சாப்பிடக்கூடாது.

பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிபானங்கள் காலாவதி ஆகியிருந்தால், அவற்றை அருந்தக்கூடாது. இது சாதாரண மக்களை விட கர்ப்பிணி பெண்களை எளிதில் பாதித்து விடும்.

வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் போன்று உடலில் வாய்வுவை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகளை அறவே தவிருங்கள்.

அதிக காரம் சோடியம் கொண்ட ஊறுகாய் போன்ற உணவுகள், ஜாம், ஜெல்லி, பப்படம் போன்ற உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.