கல்யாணத்துக்கு ஓகே சொல்லாத காதலி.. மனமுடைந்த காதலன் எடுத்த சோக முடிவு!!

308

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஆனேக்கல் கல்லுபாலு கிராமம் கெங்கேரியைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் இஞினியர் வேலை செய்து வருகிறார். இவர் ஹெம்மிகேபுரவை சேர்ந்த பெண்ணை சந்தித்து நட்பாய் பழகினார். இதனையடுத்து இவர்கள் இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள ராகேஷ் விரும்பினார். இதனால் தனது பெற்றோரிடம் இதுகுறித்து பேசியதற்கு அவர்களும் மகன் காதல் திருமணம் செய்வதற்கு வரவேற்பளித்துள்ளனர். இதனால் பெண்ணின் வீட்டிற்கு ராகேஷ் பெண் கேட்கச் சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணின் குடும்பத்தினர் ராகேஷ் மீது தாக்குதல் நடத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

வீட்டில் இருந்தோர்கள் காதல் கல்யாணத்திற்கு முழுக்கு போட்டதால் பெண்ணும் காதலை முறித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராகேஷ், தனது வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதனால் படுகாயமடைந்த அவர், விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ராகேஷ் உயிரிழந்தார்.


இந்த நிலையில், தங்களது மகன் மரணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் தான் காரணம் என ராகேஷின் குடும்பத்தினர் கெங்கேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பெண், அவரது குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.