கள்ளக்காதலன் துடிதுடிக்க வெட்டி படுகொலை.. காரில் இருந்து படியே ரசித்த கள்ளக்காதலி பிரியா.. வெளியான பகீர் தகவல்!!

334

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலாஜி நகரை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் (27). திருமணமாகாத இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கணவரை பிரிந்து வாழும் பிரியாவுக்கும் கோபாலகிருஷ்ணணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கோபாலகிருஷ்ணன் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரியா வேறொரு நபருடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார்.

இதனையறிந்த கோபாலகிருஷ்ணன் அடிக்கடி பிரியாவிடம் செல்போனில் பேசி தொந்தரவு செய்து வந்துள்ளார். பிரியாவின் கள்ளக்காதலையும் கண்டித்துள்ளார். பிரியா தன்னை கழற்றிவிட்டதை அறிந்த கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கே சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த பிரியா கள்ளக்காதலனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி தனது காதலன் ரவுடி ஆனந்தன் மூலம் கூலிப்படையை சேர்ந்த 4 பேரை வைத்து கோபாலகிருஷ்ணனை வெட்டி படுகொலை செய்துள்ளார்.

இந்த கொலை சம்பவத்தை காரில் இருந்த படியே பிரியா ரசித்துள்ளார். இதனையடுத்து அந்த கும்பல் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பிரியா வந்த காருக்குள் போட்டு விட்டு கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவத்தை அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரியா சென்ற காரை புழல் அருகே வழிமறித்து பிடித்த போலீசார், அதிலிருந்த ரத்தக்கறை படிந்த அரிவாள் மற்றும் கத்திகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரியாவின் ரவுடி காதலன் ஆனந்தன் மற்றும் கூலிப்படையினரையும் போலீசார் கைது செய்தனர்.