கள்ளக்காதலியுடன் சென்ற கணவன்.. மனைவி தூக்கிட்டு தற்கொலை!!

128

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மகன் 45 வயது ஜெய்சங்கர். இவருடைய மனைவி 36 வயது சாந்தி . இவர்களுக்கு அருண்குமார் , ரவிக்குமார் என 2 மகன்கள்.

இந்நிலையில் சாந்தி மார்ச் மாதம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், ஜெயசங்கருக்கும், சாந்திக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஜெய்சங்கர், கர்நாடக மாநிலத்தில் கல் உடைக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பெரியசோரகை அருகே தம்பிவளவு பகுதியை சேர்ந்த சின்னப்பொண்ணு (43) என்ற பெண்ணுக்கும் ஜெயசங்கருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சின்னப்பொண்ணுக்கு திருமணம் ஆகி கணவனும், 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

ஜெய்சங்கர், சின்னப்பொண்ணு பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு சென்றும் அங்கு ஒன்றாக தங்கி இருந்தும் வந்துள்ளனர்.

இதனை அறிந்த சாந்தி 3 மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மகன்களுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை ஜெய்சங்கர்,


தன்னுடைய மனைவியின் செல்போனுக்கு அனுப்பியதாக தெரிகிறது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சாந்தி வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சாந்தி தற்கொலைக்கு காரணமான அவருடைய கணவர் ஜெய்சங்கர், கள்ளக்காதலி சின்னப்பொண்ணு ஆகியோரை தாரமங்கலம் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

ஓமலூர் அருகே பண்ணப்பட்டி சந்தை தடம் என்ற இடத்தில் ஜெய்சங்கர், தன்னுடைய அக்காள் மாரியம்மாள் வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது. அங்கு சென்ற போலீசார் ஜெய்சங்கர், சின்ன பொண்ணுவை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.