கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் மருந்துகள்..! குடும்பத்தினரை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மக்கள்!

955

இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக கருத்தப்படும் ரெம்டெசிவைர் மருந்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ரெம்டெசிவைர் எ வைரஸ் தடுப்பு மருந்து மருத்துவ பரிசோதனைக்காக இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தின் கீழ் உள்ளது, அதாவது மருத்துவர்கள் அதை கருணையுடன் நோயாளிகளுக்கு பரிந்துரைக்க முடியும்.

இது குறித்து டெல்லியைச் சேர்ந்த அபினவ் ஷ்ர்மா என்ற நபர் கூறியதாவது, எனது மாமா டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு அதிக காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. அவருக்கு கொரோனா உறுதியானது மற்றும் மருத்துவர்கள் ரெம்டெசிவைர் மருந்தை வாங்கி வரச் சொன்னார்கள்.

ரெம்டெசிவைர் எங்கும் கிடைக்கவில்லை. மாமாவின் நிலை மோசமடைந்துவிட்டதால், மருந்தை ஏற்பாடு செய்யுமாறு எனக்கு தெரிந்த பலருக்கு தகவல் தெரவித்தேன். என் கண்களில் கண்ணீர் வர தொடங்கியது. என் மாமா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார், அவரைக் காப்பாற்றக்கூடிய மருந்தை ஏற்பாடு செய்ய நான் சிரமப்பட்டேன் என்று அவர் கூறினார்.


ஷர்மாவின் அவலநிலை டெல்லியில் உள்ள பல குடும்பங்களுக்கு நன்கு தெரிந்ததே, தங்கள் உறவினர்களை காப்பாற்ற அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்கின்றனர்.

பலர் மருந்துக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று கூறுகிறார்கள், அவர்களில் பலர் பழைய டெல்லியில் உள்ள மருந்து சந்தையில் அதிக விலை கொடுத்து மருந்தை வங்குவதாக கூறப்படுகிறது.