கவிழ்ந்த கண்டெய்னர் பலியான 6 உயிர்கள் : துடிதுடித்து இறந்த சோகம்!!

193

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனா்.

இந்த நிலையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சங்கலி மாவட்டம் ஜாட் தாலுகாவை சேர்ந்தவர் சந்திரம் (வயது 46). இவருக்கு தோராபாய் (40) என்ற மனைவியும், கயான் (16), தீக்‌ஷா(10), ஆர்யா (6) ஆகிய குழந்தை உள்ளனா்.

சந்திரம், பெங்களூரு எச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் வசித்து வருகிறார். மேலும் அங்குள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சந்திரம் தனது குடும்பத்தினர் உள்ளிட்டோருடன் இன்று காலையில் துமகூருவில் இருந்து பெங்களூரு நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்களது கார் பெங்களூரு புறநகர் நெலமங்களா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலையின் எதிரே வந்த கண்டெய்னர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதையடுத்து தறிகெட்டு ஓடிய கண்டெய்னர், எதிரே வந்த சந்திரம் பயணித்த காரை மீது கவிழ்ந்தது.


இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி காரில் இருந்த 6 பேரும் உயிரிழந்தனா். இதுகுறித்து உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனா்.

அந்த தகவலின்பேரில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனா். அவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனா்.

மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவர்கள் துமகூருவில் இருந்து பெங்களூரு நோக்கி வந்ததும், லாரி டிரைவரின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டு 6 பேரும் பலியானதும் தெரிந்தது.

இந்த விபத்தால் நெலமங்காள தாலுகா தலெகெரே கிராமத்தை சுற்றிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கிரேன உதவியுடன் விபத்தில் சிக்கி உருகுலைந்த வாகனங்களை போலீசார் அகற்றினா். நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த சாலையில் போக்குவரத்து சீரானது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.