மதுஅருந்தி விட்டு காதலனுடன் உல்லாசம்.. போதை காளான் சாப்பிட்ட கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

517

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பாம்பேகேசில் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (20). ஊட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

பள்ளி நண்பர்களான இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வீட்டிற்கு தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி ஆகாஷ் வீட்டில் யாரும் இல்லாததால் தனது காதலியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு இருவரும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் மாணவர் கொண்டு வந்த போதை காளானை இருவரும் சாப்பிட்டுள்ளனர்.


போதை தலைக்கு ஏறியதை அடுத்து மாணவிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். போதை தெளிந்த பிறகு காதலன் எழுந்து பார்த்த காதலி மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அறையை சோதனையிட்ட போது மதுபாட்டில்கள், போதை காளான்கள் சிக்கியது. இதனையடுத்து மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.