காதலியுடன் உல்லாசமாக இருந்த பின் கொலை செய்துவிட்டு தப்பித்த காதலன்!!

158

காதலியுடன் தனிமையில் உல்லாசமாக இருந்து விட்டு, கழுத்தை நெரித்து காதலியைக் கொலைச் செய்து விட்டு தப்பி சென்ற காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேம்ராஜ் (26).

இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது, சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஹேம்ராஜுக்கும், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண்ணான தீபாவுக்கும் (31) பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர்.

இதனிடையே, கடந்த 2022ம் ஆண்டு காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கொன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி வேலூர் சிறையில் ஹேம்ராஜ் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த ஹேம்ராஜ், தீபாவுக்கு போன் செய்து ரயில்வே துறை வேலைக்கு தேர்வு எழுதும் படியும் அதற்கான புத்தகங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதை வாங்கி கொள்ள இங்கே வர வேண்டும் என்று கூறினார். இதை நம்பிய தீபா கடந்த 14ம் தேதி ரயிலில் குடியாத்தம் வந்தார்.

பின்னர் தீபாவும், ஹேமராஜும் ரயில் நிலையம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று உல்லாசமாக உள்ளனர். அப்போது அவர்களுக்குள் திருமணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஹேமராஜ் தீபாவை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தப்பியோடினார்.


இந்நிலையில், தீபாவை காணவில்லை என அவரது பெற்றோர் சென்னை புளியந்தோப்பு போலீசில் புகார் அளித்தனர். அதன்படி தீபாவின் செல்போன் அழைப்புகளை வைத்து ஹேம்ராஜிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, தீபாவை கொன்றதை ஒப்புக்கொண்டார். பின்னர் நேற்று இரவு தீபாவின் சடலம் குடியாத்தம் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. அங்கிருந்து கத்தி மற்றும் தீபாவின் பையை கைப்பற்றினர்.

இதையடுத்து குடியாத்தம் தாலுகா போலீசார் ஹேம்ராஜிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: ஹேமராஜ் சென்னையில் பணியாற்றியபோது, அங்குள்ள கடையில் செல்போனுக்கு சிம்கார்டு வாங்கினார்.

அப்போது, அந்த கடையில் இருந்த தீபாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதற்கிடையில், கொலை வழக்கில் சிறைக்கு திரும்பிய ஹேம்ராஜ், தீபாவுடன் மீண்டும் பழக விரும்பி, ரயில்வேயில் பணிபுரியும் ஆசையில் தீபாவை அழைத்து வந்துள்ளார்.

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருவரும் உல்லாசமாக இருந்தனர். அப்போது தீபா ஹேம்ராஜிடம் ஏற்கனவே விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருவதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

ஆனால் இந்த எதிர்பாராத திருமணத்திற்கு ஏஹமராஜ் மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஹேமராஜ் , தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தீபாவின் கழுத்தை அறுத்தார்.

அப்போது அவர் அணிந்திருந்த 4 சவரன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். ஹேம்ராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.